பறவை காய்ச்சலும் திடீர் கோழி வியாபாரிகளும்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பறவை காய்ச்சல் பீதி இருந்த போதிலும் கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில்கோழி வியாபாரம் சக்கை போடு போடுகிறது. இதனால் திடீரென முளைத்த கோழிவியபாரிகள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

பறவை காய்ச்சல் பீதி காரணமாக இதுவரை ரூ. 7,000 கோடி அளவுக்கு நஷ்டம்ஏற்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.

தினசரி ரூ. 200 கோடி வரை இழப்பு ஏற்படுவதாகவும் அதன் புள்ளி விபரங்கள்கூறுகிறது.

இதனால் நாமக்கல் பகுதியில் முட்டை, மற்றும் கோழிவியாரம் மந்தமாகவே உள்ளது.வெளிமாவட்டங்கள், மாநிலங்களுக்கும் முட்டை சப்ளை குறைந்து விட்டதால்உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதிப்புகள் காரணமாக நாமக்கல், பல்லடைத்தை சேர்ந்தகோழிப்பண்ணையாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் தீவனம் வாங்கும் விலைக்கு கூட கோழிகள்விற்காததால் பண்ணையாளர்கள் கோழிகளை பட்டினி போட்டு கொன்றனர்.

யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்ட இந்த கோழிகள் பறவை காய்ச்சல் காரணமாகஇறந்திருக்கலாம் என பீதி கிளம்பியது.

கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்தில் சோதனை நடத்திய பின்னரே கோழிகள்பட்டினியால் இறந்தது தெரியவந்தது.

கோழிகள் இப்படி வீணாக சாவதற்கு அடிமாட்டு விலைக்கு விற்று விடலாம் எனபண்ணையாளர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதை பயன்படுத்தி கோவை, பல்லடம் சுற்றுவட்டார பகதிகளில் சிலர் தீடீர்கோழிவியபாரிகளாக மாறியுள்ளனர். இவர்கள் கோழிபண்ணைகளில் மொத்தமாககோழிகளை அடிமாட்டு விலைக்கு வாங்கி கோவை நகர் மற்றும் புறகநகர் பகுதி,கிராமங்களில் தெருத்தெருவாக விற்கின்றனர்.

இவர்கள் பண்ணைகளில் கிலோ ரூ. 4 முதல் 5க்கு வாங்கும் கோழிகளை, வெளியில்ரூ.10 முதல் 15 வரை விற்கின்றனர்.

முன்ன பின்ன குறைவாக இருந்தாலும் கோழிகளை உடனடியாக விற்று விடுகின்றனர்.

இதில் நல்ல லாபம் பார்த்த சிலர் நண்பர்களிடம் தெரிவிக்கவே அவர்கள் இந்தவியாபாரத்தில் போட்டி போட்டு குவித்துள்ளனர்.

பறவை காய்ச்சல் பற்றி பயம் இருந்த போதிலும் வீட்டுக்கு வந்து இவ்வளவு சீப்பாககோழிகளை கொடுப்பதால் பெரும்பாலன மக்கள் காய்கறிக்கு பதில் கோழிகளையேவாங்கி செல்கின்றனர்.

இது குறித்து வியபாரி ஒருவர் கூறுகையில், 50 கோழிகளை வாங்கினாலும் 2 நாளில்விற்று விடுகிறோம். கூட்டி கழித்து பார்த்தால் 20 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது.என்ன தெருத்தெருவாக போய் விற்க வேண்டும் அவ்வுளவுதான் என்கிறார்.

பறவை காய்ச்சல் பற்றி பீதி அடங்கும் வரை இந்த வியாபாரிகளுக்கு கொண்டாட்டம்தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+