நடராஜ் இடமாற்றல்: தேர்தல் கமிஷன் உத்தரவு தமிழக அரசை கட்டுப்படுத்தாது- உயர் நீதிமன்றம்
சென்னை:
சென்னை போலீஸ் கமிஷ்னரை இடமாற்றம் செய்யும் தேர்தல் கமிஷனின் உத்தரவுதமிழக அரசைக் கட்டுப்படுத்தாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேர்தல் விதிமுறையை மீறி முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகப் பேசியதால்அவரை தேர்தல் கமிஷன் இடமாற்றம் செய்ய உத்தரவிட்டது.இதை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அத்தோடுமாஜி டிஜிபிக்கள் பொன் பரமகுரு, தேவாரம், லட்சுமி நாராயணன் ஆகியோரும்பொது நல வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, இப்ராகிம்கலிபுல்லா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அளித்த தீர்ப்பின் விவரம்:
தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த பின் இடமாற்ற உத்தரவுகளைப் பிறப்பிக்கதேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் உண்டு. இதனால் தேர்தல் கமிஷனுடன் பேசி தமிழகஅரசு உரிய நடவடிக்கையை எடுக்கலாம்.
அதே நேரத்தில் நடராஜை இடமாற்றம் செய்ய வேண்டும், அவருக்கு பதிலாக வேறு 3அதிகாரிகளின் பெயர்களை சமர்பிக்க வேண்டும் என்ற தேர்தல் கமிஷனின்உத்தரவுகள் தமிழக அரசைக் கட்டுப்படுத்தாது என்று தீர்ப்பளித்தனர்.
துணை கமிஷனர்கள் இடமாற்றம்:
இந் நிலையில் சென்னையில் 2 போலீஸ் துணை கமிஷனர்கள் இடமாற்றம்செய்யப்பட்டுள்னர்.
அடையாறு துணை கமிஷனர் பாலதண்டாயுதபாணி, அம்பத்தூர் துணைகமிஷனராகவும், அம்பத்தூர் துணை கமிஷனராக பணியாற்றிய பாரி, அடையாறுதுணை கமிஷனராகவும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உள்ளத்துறை செயலாளர் பவன்ரெய்னா தேர்தல் கமிஷன் அனுமதியோடுஇவர்களுக்கான உத்தரவை பிறபித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் டி.ஜ.ஜி.,கள் மாற்றப்பட்டது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications