ஓராயிரம் கேள்விகள் கேட்பேன்: கருணாநிதிக்கு வைகோ எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

கலிங்கப்பட்டி:

ஒரு கேள்விக்குப் பதில் சொல்லவே கருணாநிதி பதட்டப்படுகிறார், தடுமாறுகிறார்.இன்னும் ஓராயிரம் கேள்விகளைக் கேட்கப் போகிறேன். எல்லாவற்றுக்கும் பதில்சொல்லியே ஆக வேண்டும் என்று எச்சரித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர்வைகோ.

அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வைகோ தனது பிரசாரத்தைசொந்த ஊரான கலிங்கப்பட்டியிலிருந்து தொடங்கினார். அங்கு நடந்த பிரமாண்டகூட்டத்தில் வைகோ பேசினார்.

அவர் பேசுகையில், நான் பிறந்த மண்ணில், மாணவப் பருவத்தில் ஓடித் திரிந்தஊரில், தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதில் பெருமைப்படுகிறேன். நான் வணங்கும்தெய்வம், எனது தாயின் காலடியில் வணங்கி, குருஷேத்திர யுத்தத்துக்குபுறப்பட்டுள்ளேன். நான் வெற்றி பெற வேண்டும் என்று நீங்கள் வாழ்த்திஅனுப்புங்கள்.

நான் இங்கு ஒரு படையோடு புறப்படுகிறேன். அதே நேரம், சென்னையில் முதல்வர்ஜெயலலிதா இன்னொரு படையோடு புறப்படுகிறார். இந்த இரு படைகளும்மாபெரும் வெற்றியைக் குவிக்கும். தமிழ்நாட்டுக்கு எது நில்லதை அதற்காக பிரசாரம்செய்கிறோம்.

நான் சென்னையில் நடந்த கூட்டத்தில் எடுத்து வைத்த கருத்துக்கள் இன்று தமிழ்நாடுமுழுவதும் விவாதத்தில் உள்ளன. எதற்காக இந்தக் கூட்டணிக்கு வாக்களியுங்கள்என்று கூறுகிறேன் என்றால், ஒரு குடும்ப வளர்ச்சியை மட்டும் பார்ப்பவர்களுக்குஅல்லாமல், தமிழக முன்னேற்றத்தை எண்ணிப் பார்ப்பவர்களுக்கு வாக்களிக்கவேண்டும் என்பதற்காக கூறுகிறேன்.

ஒரு குடும்பம் பல கோடி சம்பாதித்து, பத்திரிக்கை, தொலைக்காட்சி, கேபிள் டிவிகள்என வசப்படுத்தி வருகிறது. தொண்டர்களால் சுருதி சிந்தி வளர்க்கப்பட்ட கட்சியைஒரு குடும்பத்தின் ஆதிக்கத்திற்காகவும், அரசியலுக்காகவும் பயன்படுத்துவதைஅனுமதிக்க முடியாது.

வீட்டுக்கு ஒரு கலர் டிவி கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார் கலைஞர். இதைப்பார்த்து நாடே சிரிப்பாய் சிரிக்கிறது. தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தாமல்டிவி தருவதாக கூறுகிறார்கள்.

இந்த டிவியை ஏழைகளுக்கு கொடுப்பதால், அவர்களுடைய குடும்ப டிவிபார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக கூறி விளம்பரத்துக்கு,நிமிடத்திற்கு ரூ. 5 லட்சம் என்றிருப்பதை ரூ. 10 லட்சமாக அதிகரித்து விட முடியும்.இன்னும் அந்த டிவிக்கு பணம் அதிகம் சம்பாதிக்கலாம்.

ரூ. 2க்கு கிலோ அரிசியாம். அதிமுக ஆட்சியில் ரேஷன் பொருட்கள் முறையாகவழங்கப்படுகின்றன. மத்திய அரசு கூடுதல் விலைக்கு விற்கும் அரிசியை வாங்கிகிலோ ரூ. 3.50க்கு கொடுத்து ரூ. 1,350 கோடி அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துவருகிறது அதிமுக அரசு. ஆனால் விலையை உயர்த்தவில்லை.

மத்திய அரசு ரேஷன் அரிசி விலையை கூட்டும்போது மத்திய அமைச்சரவையில்அங்கம் வகிக்கும் உங்கள் பேரன் அதை எதிர்க்கவில்லை. அத்துடன் கேபினட்கூட்டத்தில் அரிசிக்குக் கொடுக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என்றுசொன்னபோது ஒத்துக் கொண்ட உங்கள் பேரன் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

டெல்லியில் ஒத்துக் கொண்ட நீங்கள் எப்படி 2 ரூபாய்க்கு கிலோ அரிசியைக்கொடுப்பீர்கள்? கொடுக்க முடியாது.அதனால்தான் அப்படிச் சொல்கிறீர்கள்.ஏனென்றால் நீங்கள் ஆட்சிக்கு வரப் போவதில்லை. வரவும் முடியாது. அதனால்ஆட்சிக்கு வருபவர்கள் கஷ்டப்படட்டுமே என்பதற்காக சொல்லி இருக்கிறீர்கள்.

கலைஞரை பத்திரிக்கையாளர்கள் சந்தித்தபோது மதிமுக பற்றி கேள்விகள் கேட்டால்பதில் சொல்லாமல் ஆத்திரப்படுகிறார். நீங்கள் குடும்ப அரசியல் நடத்துகிறீர்கள்என்று வைகோ குற்றம் சாட்டுகிறாரே என்று கேட்டால், எனக்கும் குடும்பம் உள்ளதுஎன்கிறார்.

தலைவரே நான் உங்களது குடும்பத்தைக் குறை கூறவில்லை. உங்கள்குடும்பத்துக்காக கட்சியைப் பயன்படுத்துகிறீர்களே அதைத்தான் தவறென்றுசொல்கிறேன். உங்களது குடும்ப அரசியலைத்தான் எதிர்க்கிறேன்.

மதிமுகவின் 4 எம்.பிக்களை அடகு வைத்து அமைச்சர் பதவி வாங்கி விட்டதாகவைகோ கூறுகிறாரே என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டால், பச்சைப் பொய என்றுகூறி பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகிறார். பதட்டப்படுகிறார்.

பேசும்போதும், எழுதும்போதும், நியாயத்தை சொல்லும்போதும் அதில் சத்தியம்,உண்மை இல்லையென்றால் இப்படித்தான் தடுமாறும், பதட்டம் வரும். உங்களதுகூற்றிலும் உண்மை இல்லை, சத்தியம் இல்லை. அதனால்தான் தடுமாறுகிறீர்கள்.

முதல் ரவுண்டிலேயே இப்படித் தடுமாறுகிறீர்களே, இன்னும் பைனல் ரவுண்டு வரைபோக வேண்டுமே?

நான் கேட்ட ஒரு கேளவிக்கே உங்களால் பதில் சொல்ல முடியவில்லை, 36 நாள்பிரசாரத்திலும் ஓராயிரம் கேள்விகள் கேட்பேன். அதற்குப் பதில சொல்ல வேண்டும்.உங்களால் முடியுமா?

வைகோ ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை? சங்கரன்கோவில் கேட்டார்,கோவில்பட்டி கேட்டார், வாசுதேவநல்லூர் கேட்டார். கொடுக்கவில்லை.அதனால் தான்போட்டியிடவில்லை என்கிறார்கள். அப்படி அல்ல. எனது சகாக்களை போட்டியிடவைக்க வேண்டும் என்பதற்காகத்தான் தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்றார்வைகோ.

தொடர்ந்து வைகோ தீவிரப் பிரசாரத்தைத் தொடங்கினார். அவருடன் சங்கரன்கோவில்அதிமுக வேட்பாளர் கருப்பாசமியும் உடன் சென்றார். திருவேங்கடம்,ஏழாயிரம்பண்ணை, சாத்தூர், எட்டையபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட ஊர்களில்பிரசாரம் செயத வைகோ, ஆறுமுகநேரியில் தனது முதல் நாள் பிரசாரத்தை முடித்தார்.

நடராஜ் வழக்கு: வைகோ சந்தோஷம்

இதற்கிடையே சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் நடராஜ் வழக்கில்சென்னை உயர்நீதிமன்றண் பிறப்பித்துள்ள தீர்ப்பு, ஜனநாயகத்தை நீதித்துறைகாப்பாற்றும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்றுவைகோ கூறியுள்ளார்.

நடராஜை இடமாறறம் செய்தது தொடர்பாக தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுதமிழக அரசைக் கட்டுப்படுத்தாது. இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பும் பேசிதீர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளது.

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தலைமைத் தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக விரோத அத்துமீறிய நடவடிக்கைக்குசரியான பாடம். ஜனநாயகத்தை நீதித்துறை காப்பாற்றும் என்ற நம்பிக்கை இந்தத்தீர்ப்பின் மூலம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் வைகோ.

இதற்கிடையே உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகக்கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+