சென்னை-தூத்துக்குடி விமான சேவை தொடங்கியது
தூத்துக்குடி:
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னை, தூத்துக்குடி இடையே, விமானப்போக்குவரத்து தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் முக்கிய விமானநிலையங்கள் உள்ளன. இதேபோல தூத்துக்குடி வாகைக்குளம், சேலம் ஆகியஇடங்களிலும் விமான நிலையங்கள் அமைக்கப்பட்டன.ஆனால் இங்கு பயணிகள் போக்குவரத்து திருப்திகரமாக இல்லாததால் விமானபோக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனால் தூத்துக்குடி விமான நிலையம் கடந்த 1996ம் ஆண்டு மூடப்பட்டது.முக்கியப் பிரமுகர்கள் பயணிக்கும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மட்டுமே இங்குவந்து சென்றன.
இந்த நிலையில் ஏர் டெக்கான் நிறுவனம், சென்னை, தூத்துக்குடி இடையே விமானப்போக்குவரத்தை நடத்த முடிவு செய்தது. இதையடுத்து விமான நிலையம்புதுப்பிக்கப்பட்டு புதுப் பொலிவு கண்டது.
குறைந்த கட்டணத்தைக் காண்ட இந்த விமான சேவை நேற்று துவங்கியது.சென்னையிலிருந்து கிளம்பிய முதல் விமானம் மதுரை வழியாக முற்பகல் 11.15மணிக்கு தூத்துக்குயில் தரையிறங்கியது.
இந்த விமானத்தில் 33 பேர் பயணம் செய்தனர். பின்னர் பகல் 12.15 மணிக்கு மீண்டும்மதுரை வழியாக விமானம் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றது.
விமானப் போக்குவரத்தை முன்னாள் மத்திய அமைச்சரும், நெல்லை எம்பியுமானதனுஷ்கோடி ஆதித்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னையிலிருந்துதூத்துக்குடிக்கு பயண நேரம் 2 மணி நேரமாகும்.
தொழில் நகரமான தூத்துக்குடிக்கு விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளதன் மூலம்நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் பயன் பெறுவர் என்று டெக்கான் நிறுவனம்தெரிவித்துள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications