எதிர்க்கட்சிகளின் திணறல்: ஜெ. "அட்டாக்!
விழுப்புரம்:
எதைச் சொல்லி வாக்கு கேட்பது என்று தெரியாமல் எதிர்க்கட்சிகள் திணறிவருகின்றன, திகைத்து நிற்கின்றன என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
விழுப்புரத்தில் அதிமுக வேட்பாளர் பசுபதியை ஆதரித்துப் முதலவர் ஜெயலலிதாபிரசாரம் செய்தபோது, வாக்குறுதியை நிறைவேற்றும் உறுதிப்பாடு எதிர்க்கட்சிகளிடம்இல்லை.சொல்லுக்கும், செயலுக்கும் என்னிடம் இடைவெளியே கிடையாது. ஆனால்எதிர்க்கட்சிகளிடம் இந்த இரண்டுக்கும் சம்பந்தமே கிடையாது.
எதைச் சொல்லி வாக்கு கேட்பது என்று தெரியாமல் எதிர்க்கட்சிகள் திணறுகின்றன,திகைத்து நிற்கின்றன. ஆனால் நாங்களோ எந்தச் சாதனையைச் சொல்வது, எதைவிடுவது என்று தெரியாமல் நிற்கிறோம். 2001ல் அபரிதமான ஆதரவைத் தந்தீர்கள். அன்று நீங்கள் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. அதேபோன்ற ஆதரவை இப்போதும் தருவீர்கள் என நம்புகிறேன்என்றார் ஜெயலலிதா.
தொடர்ந்து கண்டமங்களம், வானூர் கோட்டகுப்பம் பகுதிகளிலும் ஜெயலலிதாபிரசாரம் செய்தார். பின்னர் புதுவை மாநிலம் மதகடிப்பட்டு என்ற இடத்தில்ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார்.
அங்கிருந்து ரெட்டியார்பாளையம், காசுக்கடை, மண்ணடிப்பட்டு, லாஸ்பேட்டை,உருளையன்பேட்டை, ஏம்பலம், பாகூர், உப்பளம் உள்ளிட்ட தொகுதிகளில் பிரசாரம்செய்தார். தனது பிரசாரத்தின்போது, காங்கிரஸ், திமுக ஆட்சிகளில் புதுவை மாநிலம்சீரழிந்து போய் விட்டது. வேலையில்லா இளைஞர்கள் பெருகி விட்டனர்.
தமிழகத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட தீவிரவாதிகளுக்கு புதுவை மாநிலம்புகலிடமாக மாறி விட்டது. இந்த அவலத்திற்கு முடிவு கட்டவே அதிமுக, புதுச்சேரிமுன்னேற்ற காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஓரணியில் திரண்டுஉங்களை சந்திக்க வந்துள்ளன.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதுவைக்கு சிறப்பு மாநில அந்தஸ்தைப் பெற்றுத்தருவோம். 30 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள உள்ளாட்சித் தேர்தலை நடத்திமுடிப்போம். தமிழகத்தைப் போல இங்கும் திருக்கோவில் அன்னதானத் திட்டம்,மசூதி, தேவாலயங்களில் அன்னதானத் திட்டததை அமல்படுத்துவோம்.
தீவிரவாதிகளையும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரையும் கிள்ளி எறியகுண்டர் தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வருவோம்.
சென்னையிலிருந்து புதுவைக்கு மினி கப்பல் போக்குவரத்தை அமல்படுத்துவோம்.அதி நவீன தொழில்நுட்பப் பூங்கா இங்கு ஏற்படுத்தப்படும். பாமகவின் ஜிப்மர்தன்னாட்சி முயற்சிகளை முறியடித்து தொழிலாளர்கள், நோயாளிகளின் நலன்காப்போம் என்றார் ஜெயலலிதா.
ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் பெண்கள் அதிக அளவில்திரண்டு வந்திருந்தனர். வழியெங்கும் தாரை, தப்பட்டைகள் முழங்கஜெயலலிதாவுக்கு வரவேற்புகொடுக்கப்பட்டது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications