கடலூர் சிறை கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல்
கடலூர்:
கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் இன்று காவல்துறை உயர்அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஏராளமான செல்போன்கள் சிக்கின.
கடலூர் மத்திய சிறையில் 1000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.பல்வேறு வட மாவட்ட கைதிகள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். சங்கரராமன்கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான கூலிப் படைத் தலைவன்அப்புவும் இங்குதான் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு கடலூர் சிறையில் சிறை வார்டன்கள்கைதிகளிடம் சோதனை நடத்தினர். அவர்களிடம் செல்போன்கள் இருப்பதாக வந்ததகவலயைடுத்து இந்த சோதனை நடந்தது.
ஆனால் இதை எதிர்த்து கைதிகள் கலகத்தில் ஈடுபட்டனர்.
இதில் நான்கு வார்டன்களும், நான்கு கைதிகளும் படுகாயம் அடைந்தனர்.காயமடைந்த கைதிகள் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து இன்று காலை காவல்துறை உயர் அதிகாரிகள் சிறைக்கு வந்தனர். அவர்கள்முன்னிலையில் போலீஸார் தீவிர சோதனையைத் தொடங்கினர்.
இந்த சோதனையில் 50க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இந்த அளவுக்கு செல்போன்கள் கைதிகளிடம் இருந்தது அதிகாரிகளை பெரும்அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த செல்போன்கள் எப்படி வந்தன,யார் கொடுத்தார்கள், இந்த செல்போன்கள் மூலம்மேற்கொள்ளப்பட்ட அழைப்புகள் குறித்து போலீஸார் தீவிர விசாரணைமேற்கொண்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications