2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தீடீர் நீக்கம்
சென்னை:
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக பணியாற்றி வந்த 2,000ஆசிரியர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் பள்ளிகளை போலவே அரசு பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் பாடத்திட்டதைதமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இதற்காக அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1999ல்ஒப்பந்த அடிப்படையில் முதற்கட்டமாக ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள்நியமிக்கப்பட்டனர்.பிறகு 2000ம் ஆண்டிலும் இரண்டாம் கட்டமாக கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமனம்செய்யப்பட்டனர். எல்காட் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில்ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.1 ,500 வழங்கப்பட்டு வந்தது.
5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையிலே இவர்கள் பணியாற்றி வந்தனர்.இந்நிலையில் எல்காட் நிறுவனத்திற்கும், அரசுக்கும் இடையிலான ஒப்பந்தம் 2004ல்நிறைவடைந்தது. இதனால் இவர்களின் பணிக்காலத்தை மேலும் 2 ஆண்டுகள்நீட்டிக்க அரசு உத்தரவிட்டது.
ஆனால் இவர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக சம்பளம் பெறலாம் எனதெரிவித்தது. இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களை நியமணம்செய்ய வேண்டும் என இவர்கள் பல்வேறு போரட்டங்களை நடத்தி வந்தனர்.
பிப்ரவரி 15ல் சென்னையில் நடந்த போராட்டத்தில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டு மார்ச் 6ம் தேதி விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்களாக இருந்த2,000 பேரையும் பணியிலிருந்து நீக்கியுள்ளது தமிழக அரசு.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் இவர்களை பணியிலிருந்து விடுவிப்பதாக கடிதம்கொடுத்து வருகின்றனர்.
இது குறித்து கம்ப்யூட்டர் ஆசிரியர் ஒருவர் கூறுகையில், சில பள்ளிகளில் கம்ப்யூட்டர்ஆசிரியர்களுக்கான சம்பளம் நிலுவையில் உள்ளது. எங்களிடம் உள்ளபொறுப்புகளை இன்னும் பள்ளிகளில் ஒப்படைக்கவில்லை.
பணி நிரந்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் எங்களைபணியிலிருந்து விடுவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு எங்களுக்குமீண்டும் வேலை வழங்க வேண்டும் என்றார்.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications