அதிமுகவுக்காக கிராமங்களில் சிம்ரன் பிரச்சாரம்
சென்னை:
அதிமுகவை ஆதரித்து நடிகை சிம்ரன் 20 நாள் பிரச்சாரம் செய்கிறார்.
எதிர் கட்சிகளையும் சினிமா நட்சத்திரங்களையும் இழுத்து வரும் அதிமுகவில்கடைசியாய் சேர்ந்தவர்கள் சிம்ரனும் அவரது கணவர் தீபக் பாகாவும்.நடிகர்கள் முரளி, செந்தில் ஆகியோர் ஒரு வழியாக கை , கால் நடுங்கியபடியேமேடைகளில் பேச ஆரம்பித்துவிட்டனர். முரளியின் தமில் தான் ரொம்பபிரச்சனையாக உள்ளது. ஆனாலும் புச்சித் தலைவியின் ஆச்சி அமைப்போம் என்றுகூசாமல் தமிலில் பின்னி எடுத்து வருகிறார்.
செந்திலுக்கு பிட் பேப்பர் இல்லாவிட்டால் பொதுக் கூட்டத்தில் பேச்சே வராது.கையில் பேப்பரைப் பிடித்தபடி அதில் உள்ளதை வாசித்தபடியே கருணாநிதியைத்திட்டுவதில் கைதேர்ந்தவராகிவிட்டார்.
முரளி, செந்தில் ஆகியோரோடு ரஜினி ரசிர்களின் ஒரு பகுதியினரையும்வளைத்துவிட்ட அதிமுக எதற்கு மிச்சம் வைப்பானேன் என்று சிம்ரனை அவரதுகணவருடனும் விந்தியாவையும் இழுத்துள்ளது.
தன்னை வாழ வைத்த தமிழ் சினிமாவை பேருக்குக் கூட மதிக்காமல் தூக்கிக் கடாசிவிட்டு ஓடியவர் சிம்ரன். ராஜூ சுந்தரம்,கமல் ஆகியோருடன் கிசுகிசுக்கப்பட்டு அவையெல்லாம் முறிந்த நிலையில் தனது டெல்லிக் காதலரான தீபக் பாகாத்ைதிருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன சிம்ரன், தனது திருமணத்துக்கு கோலிவுட்டைச் சேர்ந்த ஒருவரைக் கூடகூப்பிடவில்லை என்பது நினைவுகூறத்தக்கது.
தனது திருமண செய்தியைக் கூட தமிழ்ப் பத்திரிக்கைகளுக்கு அவர் தெரிவிக்கவில்லை. இந்திப் பத்திரிக்கைகளில் நியூஸ்வந்த பின்னர் தான் தமிழ்நாட்டுக்கே விஷயம் தெரிந்தது.
இந் நிலையில் சிம்ரன் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துதேர்தல் பிரச்சாரத்திலும் சிம்ரன் ஈடுபடபோவதாகத் தெரிகிறது. 20 நாட்கள் சிம்ரன்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடபோவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான பயண விபரத்தையும் அதிமுக தலைமை கழகம் சிம்ரனிடம் தயாரித்துகொடுத்துள்ளது. தென் மாவட்டங்களில்" குறிப்பாக கிராமப் புறங்களில் சிம்ரன்பிரச்சாரம் செய்வார் எனத் தெரிகிறது.
அதே போல நடிகை விந்தியா, திருவையாறு தொகுதிக்கு சீட் கேட்டு மறுக்கப்பட்டசசிகலாவின் உறவினரான சினமா பாடலாசிரியர் சினேகன் ஆகியோரும்அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.
மேலும் காணாமல் போன நடிகை காயத்ரி ரகுராமின் தயாரான டான்ஸ் மாஸ்டர்கள் கிரிஜா, அவரது கணவர் ரகுராம்ஆகியோரும் அதிமுகவுக்காக தீவிரப் பிரசாரத்திலும் ஈடுபடவுள்ளனர்.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications