அடுத்து மாட்டுகிறார் உளவுப்பிரிவு சிவணான்டி?
சென்னை:
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் இடமாற்ற விவகாரம் தொடர்பாகசென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்யப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் குப்தா பேசுகையில்,ஆணையர் நடராஜ் இடமாற்ற விவகாரம் தொடர்பாக இன்னும் அரசுடன்பேச்சுவார்த்தை எதுவும் தொடங்கவில்லை. உயர்நீதிமன்றம் இந்த விவகாரம்தொடர்பாக பிறப்பித்துள்ள உத்தரவு குறித்த தீர்ப்பின் நகல் தேர்தல் ஆணையத்திற்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது குறித்து தேர்தல்ஆணையம் முடிவு செய்யும்.
உளவுப் பிரிவு டிஐஜி சிவனாண்டி ஆளுங்கட்சிக்காக பிரசாரம் செய்ததாக வாய் மூலம்புகார் வந்துள்ளது. இந்தப் புகார் குறித்தும் விசாரித்து வருகிறோம்.
பிரசாரம் செய்தவர்களுடன் அவர் நின்றிருந்தாரா அல்லது இவரே பிரசாரத்தில்ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார் நரேஷ்குப்தா.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications