அதிமுகவில் கோவை சரளா!
தஞ்சாவூர்:
திரைப்பட இயக்குனர் கே.பாக்யராஜ் திமுகவில் சேர்ந்த நிலையில் காமெடி நடிகைகோவை சரளா ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார்.
தேர்தலுக்கு முன்பு ஏகப்படட நடிகர், நடிகைகள், அதிமுகவில் சரமாரியாக இணைந்து(இழுக்கப்பட்டு) வந்தனர். தேர்தலுக்குப் பிறகும் அது தொடருகிறது.இந் நிலையில் காமெடி கோவை சரளா தனது குடும்பத்தினருடன், தஞ்சை வந்தார்.அங்கு சங்கம் ஹோட்டலில் தங்கியிருந்த முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தான்அதிமுகவில் இணைந்தார்.
சரளா அதிமுகவில் இணைவதாகத் தெரிவித்ததாகவும் அதை ஜெயலலிதாஉடனடியாக ஏற்றுக் கொண்டதாகவும் அதிமுக தரப்பில் செய்திவெளியிடப்பட்டாலும் சரளாவின் பின்னால் அலையோ அலை என்று அலைந்துஇழுத்தது அதிமுக தரப்பு தான் என்று கூறப்படுகிறது.
எஸ்எஸ் சந்திரன், எஸ்விசேகர், செந்தில், குண்டுகல்யாணம், பிந்து கோஷ் ஆகியதமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் வரிசையில் கோவை சரளாவும் சேர்ந்துள்ளார்.
இதேபோல திமுக தலைமைக் கழக பேச்சாளர் வீரக்கனல் மாரிமுத்து என்பவரும்திமுகவிலிருந்து அதிமுகவுக்கு அலேக் ஜம்ப் செய்தார்.
திமுகவில் இருந்து ஆட்களை இழுக்கும் வேலைகளை கவனிக்க உளவுப் பிரிவுதலைமையில் ஒரு தனிப் படையே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
கோவை சரளா அதிமுகவில் இணைந்துள்ள நிலையில் அவரைசினிமாவில்அறிமுகப்படுத்தியவரான இயக்குனர் கே.பாக்யராஜ், தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கலையுலகில் எனது வாரிசு என்று எம்.ஜி.ஆரால் அறிவிக்கப்பட்ட பாக்கியராஜ்இடையில் சிறிது காலம் தனிக் கட்சி தொடங்கி போண்டி ஆனவர்.
பின்னர் ஞானப் பழம் மாதிரி சில படங்களை எடுத்து திரையுலகிலும் பெரும் சரிவைசந்தித்தவர். இப்போது பாக்யா பத்திரிக்கையை மட்டும் நடத்திக் கொண்டுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு சொக்கத்தங்கம் படம் மூலம் மீண்டும் சினிமாவுக்குத்திரும்பினார். ஆனால் அந்தப் படத்தை தயாரித்த ஜீவி பெரும் நஷ்டமடைந்துகடைசியில் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குப் போனார்.
சமீபத்தில் பாக்யராஜ் தனது மகள் சரண்யாவை அறிமுகப்படுத்தி பாரிஜாதம் என்றபடத்தைத் தயாரித்துள்ளார். இப்படம் தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியாகிறது.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications