டி.ஆரை வளைக்க திமுக தீவிரம்-ஸ்டாலின் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக கூட்டணியில் நடிகர், நடிகைகள் பட்டாளம் கும்பல் கும்பலாக ரேட் பேசிஇழுக்கப்பட்டு வரும் நிலையில், திமுகவின் முக்கிய சினிமா ஸ்டாரான சரத்குமார்மத்தியில் மந்திரி பதவி வாங்கித் தராவிட்டால் பிரச்சாரத்துக்கு வர மாட்டேன் என்றுமுரண்டு பிடித்து வருகிறார்.

இதையடுத்து தங்கள் பக்கம் சினிமா கவர்ச்சி இல்லாததால் பதறிப் போயுள்ள திமுகபாக்கியராஜை இழுத்துப் போட்டது. தனது மகளை வைத்து இவர் தயாரித்த பாரிஜாதம்படம் வெளியாவதில் பயங்கர சிக்கல் நிலவுவதால், ஏகப்பட்ட பண டென்சனில்உள்ளார் பாக்கியராஜ்.

இந் நிலையில் திடீரென அவர் திமுகவுக்கு வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தங்களுடன் தேவையில்லாமல் சண்டை போட்டுக் கொண்டுவிலகிச் சென்ற விஜய டி.ராஜேந்தரையும் மீண்டும் சமாதானப்படுத்தும் வேலைகளில்திமுக இறங்கியுள்ளது.

அதிமுக கூட்டணியில் சீட் கிடைக்கும் என்று நம்பி திமுக தலைவர் கருணாநிதியைவாய்க்கு வந்தபடி விமர்சித்த டி.ஆர். இப்போது அரசியலில் கைவிடப்பட்டு, கேர்ஆப் பிளாட்பாரத்தில் உள்ளார்.

அவரை கட்சிக்குள் மீண்டும் இழுக்க இதுவே சரியான தருணம் என்பதை உணர்ந்ததிமுக புயல் வேகத்தில் களத்தில் இறங்கியுள்ளது.

நொந்து போயிருக்கும் டி.ராஜேந்தரை திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின்திடீரென சந்தித்துப் பேசியுள்ளார். அவரைத் தொடர்ந்து திமுக பொருளாளர் ஆற்காடுவீராசாமியும் ராஜேந்தரைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்புகளை சாத்தியப்படுத்தியவர் முன்னாள் திமுக அமைச்சர் ரகுமான் கான்என்று கூறப்படுகிறது. அவர் தான் முதலில் ராஜேந்தரை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

ரகுமான் கான் தான் இப்போது திமுக சார்பில் சென்னை பூங்கா நகர் தொகுதியில்போட்டியிடுகிறார்.

இந்தத் தொகுதியில் தான் முன்பு டி.ராஜேந்தர் திமுக சார்பில் நின்று வென்றார் என்பதுகுறிப்பிடத்தக்கது. இத் தொகுதியில் டி.ஆருக்கு கொஞ்சம் ஆதரவும் உள்ளது.

ஸ்டாலின், ஆற்காடு ஆகியோர் அடுத்தடுத்து ராஜேந்தரை சந்தித்தது அவரை திமுககூட்டணிக்கு ஆதரவாக இழுக்க நடக்கும் முயற்சிகளை உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனால் அவருக்கு சீட் ஏதும் தருவதாக திமுக தரப்பல் உறுதியளிக்கப்பட்டுள்ளதாஎன்று தெரியவில்லை.

சீட் வேண்டும் என்று ராஜேந்தர் முரண்டு பிடித்தால், பூங்கா நகரில் தற்போதுபோட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ரகுமான் கான் விலகிக் கொண்டு அவருக்குப்பதில் ராஜேந்தர் உதயசூரியன் சின்னத்தின் கீழ் போட்டியிடக் கூடும் என்றும்கூறப்படுகிறது.

இதுகுறித்து ராஜேந்தரிடம் கேட்டபோது, நான் என் பாணியில் தனி வழியில் போய்க்கொண்டிருக்கிறேன். லட்சிய திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின்பட்டியலை தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.

சனிக்கிழமை கடலூரில் எனது பிரசாரத்தைத் தொடங்குகிறேன். அங்கு விரிவாகபேசுவேன் என்றார்.

கடலூரில் திமுக ஆதரவு நிலையை ராஜேந்தர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கக் கூடும்எனத் தெரிகிறது.

சமீபகாலமாக முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தராஜேந்தர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்தார்.பின்னர் நடந்த கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம் இடைத் தேர்தலிலும் அதிமுகவுக்குஆதரவாக பிரசாரம் செய்தார்.

இந்த முறை ஜெயலலிதாவால் கைவிடப்பட்ட பின் சமாஜ்வாடியின் தமிழக தலைவர் இந்தியன் வங்கிகோபாலகிருஷ்ணன், தன்னைப் போலவே நம்பிக் கெட்ட திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோருடன் தனி கூட்டணிஅமைப்போம் என்று பேசிப் பார்த்தார். அவர்கள் சரிப்பட்டு வராததால் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் ஜார்ஜ்பெர்னாண்டஸையும் சந்தித்துப் பேசினார். எதுவும் கைகூடாததால் தனித்துப் போட்டி என்று அறிவித்தார்.

இந் நிலையில் தான் அவரை வளைக்க திமுக தீவிரமாகியுள்ளது.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+