ஆண்டிப்பட்டியில் புரட்சிப் புயல்: புரட்சித் தலைவிக்காக பிரசாரம்

Subscribe to Oneindia Tamil

ஆண்டிப்பட்டி:

முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆண்டிப்பட்டி தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஓட்டுக் கேட்டு பிரசாரம் செய்தார்.

கலிங்கப்பட்டியிலிருந்து பிரசாரத்தைத் தொடங்கிய வைகோ வெள்ளிக்கிழமைஜெயலலிதா போட்டியிடும் ஆண்டிப்பட்டியில் பிரசாரம் மேற்கொண்டார்.

வைகை அணை சாலையில் நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், கோடிக்கணக்கானஇதயங்களும் இன்று ஆண்டிப்பட்டியின் பக்கம் திரும்பியுள்ளன.

இந்தக் கூட்டத்தின் மூலம் நான் தெரிவிக்க விரும்பும் முக்கிய கருத்துஎன்னவென்றால், இங்கு ஜெயலிதாவை எதிர்த்துப் போட்டியிடும் அனைத்துவேட்பாளர்களும் டெபாசிட் இழக்க வேண்டும் என்பதுதான்.

வல்லரசான அமெரிக்காவில் கூட இயற்கைப் பேரழிவு பாதித்தபோது நிவாரணபணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியவில்லை. ஆறு மாத காலத்திற்குப்பின்பே சுனாமி நிவாரணப் பணிகளை அவர்களால் தீவிரப்படுத்த முடிந்தது.

ஆனால் தமிழ்நாட்டில் சுனாமி பாதித்த பகுதிகளில் மறு நாளே நிவாரணப் பணிகளைமுதல்வர் தீவிரப்படுத்தி எந்த ஒரு முதல் அமைச்சரும் செய்ய முடியாத சிறப்பானஆட்சியை செய்துள்ளார்.

இதன் காரணமாக ஜெயலலிதா மீது பிரதமர் மன்மோகன் சிங்கும் நல்ல அபிப்ராயம்வைத்துள்ளார். அவரால் வெளியில் தெரிவிக்க முடியவில்லை என்றாலும் முதல்வர்ஜெயலலிதாவை மனதுக்குள் பாராட்டி வருகிறார்.

மதிமுகவின் 4 எம்.பிக்களையும் தங்களது கணக்கில் சேர்த்துக் கொண்டு கூடுதலாகஅமைச்சர் பதவியைப் பெற்றதாக மன்மோகன்சிங் மற்றும் சோனியா காந்தி என்னிடம்தெரிவித்த கருத்துக்களை கூட்டங்களில் பேசி வருகிறேன்.

ஆனால் இதனை தயாநிதி மாறன் மறுக்கிறார். பிரதமர் மறுக்கட்டும், அதுதான்நிஜமாகும். தயாநிதியின் மறுப்பு எனக்குத் தேவையில்லை.

மதிமுக எம்.பிக்களை வைத்து அமைச்சர் பதவி பெற்ற திமுக அமைச்சர்கள்ராஜினாமா செய்ய வேண்டும். இது இந்தக் கூட்டத்தின் மூலமாக நான் வைக்கும்அறைகூவல். என் மீது வழக்கு போடும் விஷயத்தில் தயாநிதி மாறனின் சலசலப்புக்குநான் அஞ்ச மாட்டேன் என்றார் வைகோ.

பின்னர் பெரியகுளத்தில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு கேட்டு பிரசாரம்செய்தார் வைகோ.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+