திமுகவுக்கு டி.ஆர் நோ: தனித்துப் போட்டி

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

திமுகவில் இணைய வேண்டுமானால் தனது கட்சிக்கு சில சீட்களைத் தர வேண்டும்என்று விஜய டி.ராஜேந்தர் வைத்த கோரிக்கையை அக் கட்சி நிராகரித்துவிட்டதாகத்தெரிகிறது.

இதையடுத்து தனித்துப் போட்டியிடப் போவதாக டி.ராஜேந்தர் ஆறிவித்துள்ளார்.

சின்னக் கட்சி என்று எங்களை யாரும நினைக்க வேண்டாம். தனித்துப் போட்டியிட்டுகலக்குவேன் என்று அவர் கூறியுள்ளார்.

லட்சிய திமுக தலைவரான டி.ராஜேந்தர் அதிமுகவுக்கு குரல் கொடுத்து வந்தார்.தேர்தலில் போட்டியிட தனது கட்சிக்கு 9 சீட் கேட்டார்.

ஆனால் ஒரு சீட் கூட தராமல் அவரை கழுத்தைப் பிடித்து வெளியேற்றாத குறையாரவிரட்டிவிட்டுவிட்டார் முதல்வர் ஜெயலலிதா.

இந் நிலையில் குழம்பிப் போயிருந்த ராஜேந்தரை திமுக துணைப் பொதுச் செயலாளர்ஸ்டாலின், பொருளாளர் ஆற்காடு வீராசாமி, முன்னாள் அமைச்சர் ரகுமான்கான்ஆகியோர் போய் பார்த்து திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யக் கோரினர்.

மீண்டும் திமுகவில் சேரவும் வலியுறுத்தினர். அப்போது தனக் கட்சிக்கு 3 சீட் தந்தால்திமுக கூட்டணியில் சேர்வதாக ராஜேந்தர் கூறினார்.

ஆனால், கூட்டணி எல்லாம் முடிவாகி சீட் பங்கீடும் முடிந்துவிட்டதால் இனிமேல்இடங்களைக் கொடுப்பது சாத்தியமில்லை என திமுக கூறிவிட்டது.

கட்சியைக் கலைத்துவிட்டு திமுகவில் சேருமாறும் ஆட்சியமைத்தால் மேலவையைஉருவாக்க கருணாநிதி திட்டமிட்டுள்ளதாகவும், அப்போது ராஜேந்தர் தரப்பைச்சேர்ந்த சிலருக்கு எம்எல்சி பதவிகள் தரப்படும் என்றும் ஆற்காடு பேசிப் பார்த்தார்.

ஆனால், திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேண்டுமானால் சீட்கொடுத்தால் தான் ஆச்சு என்று கூறிவிட்டார் டி.ஆர். கட்சியைக் கலைக்க முடியாதுஎன்றும் கூறிவிட்டார்.

அத்தோடு எம்ஜிஆருக்கு ஆதரவாக இருந்த பாக்கியராஜ் திமுகவுக்கு வந்துள்ளதால்தனக்கு அங்கு முக்கியத்துவம் கிடைக்குமா என்ற சந்தேகமும் டி.ஆர் தரப்புக்குஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந் நிலையில் கடலூரில் நடந்த லட்சிய திமுக தன்னிலை விளக்கக் கூட்டத்தில்பேசிய டி.ஆர்,

திமுகவை பயன்படுத்தி நான் வளரவில்லை. திராவிடன், தமிழன் என்ற உணர்வுஇருந்தது. ஒரு கூட்டத்துக்காவது நான் பணம் வாங்கியிருப்பேனா? 23 ஆண்டுகள்திமுகவில் கொ.ப.செவாக இருந்தேன்.

திமுகவை விட்டு நீக்கப்பட்டதும் 24 மணி நேரத்தில் லட்சிய திமுகவைத்தொடங்கினேன். 7 கட்சி கூட்டணி வந்ததும் என்னை உறுப்பினர் பதவியிலிருந்துதூக்கி வீசினார்கள். எனக்காக யாரும் குரல் கொடுக்கவில்லை.

என்னுடன் வந்தது தொண்டனும், ரசிகனும்தான். கடந்த ஒன்றரை ஆண்டுகளாகஅதிமுகவுக்கு குரல் கொடுத்தேன். அப்போது புலியும் (வைகோ) வரவில்லை,சிறுத்தையும் (திருமா) வரவில்லை.

எனது கட்சிக்கு 9 சீட் கேட்டேன். ஒரு சீட் தருவதாக கூறினார்கள். ஏற்க மறுத்துவிட்டேன். என்னைறக்குமே நான் எனக்காக கவலைப்பட்டதில்லை. மக்களுக்குசேவையாற்ற ஒரு சீட் போதாது என்பதால் ஏற்க மறுத்து விட்டேன். (அடடடா..)

234 தொகுதியிலும் நிற்க எனக்கு தைரியம் இருக்கிறது. ஆனால் குறுகிய காலஅவகாசமே இருப்பதால் குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் நிற்பேன்.

கலைஞர் மீது உள்ள அன்பினால் அவரை எதிர்த்துப் போட்டியிட மாட்டேன். அம்மாஜெயலலிதா எனக்கு அன்பையும், பண்பையும் காட்டினார். எனவே அவரைஎதிர்த்தும் போட்டியிட மாட்டேன்.

6 மாதத்தில் கட்சி ஆரம்பித்த விஜயகாந்த் நாளைய முதல்வர் என்கிறார். 15 கிலோஅரிசி கொடுப்பேன் என்கிறார்.

நல்லாட்சியையும், அரிசியையும் கூட அவர் தர வேண்டாம். பேரரசு படத்தை ரிலீஸ்செய்தால் போதும். ஒரு படத்தையே ரிலீஸ் செய்ய முடியாத அவர் எப்படி நல்லாட்சிகொடுப்பார்?, 15 கிலோ அரிசி கொடுப்பார்? என்றார் ராஜேந்தர்.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+