நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 13ம் தேதி தொடங்குகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் மே 8ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்துஏற்பாடுகளும் முழுவீச்சில் செய்யப்பட்டு வருகின்றன. வாக்காளர் பட்டியல்திருத்தப்பட்டு விட்டது. ஆளும்கட்சியினர் சேர்த்த லட்சக்கணக்கான போலிவாக்காளர்கள் நீக்கப்பட்டுவிட்டனர்.புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.தலைமைத் தேர்தல் ஆணையர் டாண்டன் மற்றும் இரு தேர்தல் ஆணையர்களும்தமிழகத்திற்கு வந்து பல்வேறு ஆய்வுகளை செய்து விட்டுச் சென்றுள்ளனர்.
அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முடிந்துள்ள நிலையில்இறுதிக் கட்டமாக இன்று சென்னையில் வடக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள், உதவித்தேர்தல் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது.
இந் நிலையில் நாளை மறுநாள் (13ம் தேதி) தேர்தலுக்கான அறிவிப்பை முறைப்படிதேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. அன்றே வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
மனுதாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 20ம் தேதியாகும். 21ம் தேதி மனுக்கள்பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஏப்ரல் 24ம் தேதி.வாக்குப் பதிவு மே 8ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 11ம் தேதிநடைபெறும்.
அனைத்து முக்கியக் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்டநிலையில் முதல் நாளிலிருந்தே வேட்பு மனு தாக்கல் சூடு பிடிக்கும் எனத் தெரிகிறது.
| TAMILNADU NEWS | INDIA NEWS |
| [an error occurred while processing this directive] |
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications