முத்துலட்சுமி அரசியலுக்கு வர கூடாது: ராமதாஸ்
தர்மபுரி:
வீரப்பனின் மனைவி முத்துலட்சமி அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது என்றுபாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மேட்டூர் அல்லது பெண்ணாகரத்தில் பாமக வேட்பாளரை எதிர்த்து முத்துலட்சுமிபோட்டியிடக் கூடும் என்று கூறப்படுகிறது.
![]() |
| பெண்ணாகரத்தில் பாமக கூட்டத்துக்கு வந்திருந்த முத்துலட்சுமி |
இந் நிலையில் தர்மபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ்,
புதுவை தொகுதி உடன்பாடு குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று நீங்களே(செய்தியாளர்கள்) கூறுகிறீர்கள். இந்தக் குழப்பத்துக்கான விளக்கத்தை திமுக தலைவர்கருணாநிதிதான் கொடுக்க வேண்டும்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் முத்துலட்சுமி அரசியலுக்கு வருவது குறித்துகேட்கிறார்கள். பாமகவில் சேருவாரா என்றும் கேட்கிறார்கள். என்னைப்பொருத்தவரை, அவரது நோக்கம் (அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குநிவாரணம் தேடித் தருவது) நல்ல நோக்கம்தான். ஆனால் அதற்கு அரசியல்தான்சரியான தீர்வு என்று கூற மாட்டேன்.
தனியாக தொண்டு நிறுவனம் போல ஏதாவது ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் தனதுநோக்கத்தை நிறைவேற்ற முத்துலட்சுமி பாடுபடலாம். அரசியலில் நுழைய வேண்டும்என்று தனிப்பட்ட முறையில் அவருக்கு அறிவுரை கூறிக் கொள்ள விரும்புகிறேன்என்றார் ராமதாஸ்.
முன்னதாக சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட ராமதாஸ்அங்கு பேசுகையில்,
வேலை வாய்ப்பு கேட்டு தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 54லட்சம் பேர் பதிவு செய்து வைத்துள்ளனர். அதில் 13 லட்சம் பேர் பெண்கள். ஆனால்ஜெயலலிதா பதவியேற்றதும் பிறப்பித்த முதல் அரசு ஆணை என்னவென்றால், அரசுவேலைக்கு ஆள் எடுப்பதை நிறுத்தும் உத்தரவுதான்.
அதிமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக சமூகத்தின் அத்தனைதரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். யாரையும் அவர் விட்டுவைக்கவில்லை.கல்வித்துறை சீர்குலைந்து போய்க் கிடக்கிறது. எனவே வருகிற தேர்தலில் திமுகதலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும். இந்தத் தேர்தலில் 100 சதவீத வெற்றியை ஜனநாயக முற்போக்குக்கூட்டணி பெறும் என்றார் ராமதாஸ்.
இதற்கிடையே பாண்டிச்சேரி கூட்டணி தொடர்பான சிக்கல் முடிவுக்கு வந்துள்ளதாகத்தெரிகிறது. பாமகவுக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து 2 தொகுதிகள் மட்டுமேதரப்பட்டன. திமுகவுக்கு மட்டும் 11 தொகுதிகள் தரப்பட்டன.
ஆனால், 4 தொகுதிகளை பாமக கோரியது. இந் நிலையில் தேர்தலுக்குப் பின் நியமனஎம்எல்ஏவாக பாமகவைச் சேர்ந்த ஒருவருக்கு பதவி தருவதாக காங்கிரஸ்உறுதியளித்துள்ளது.
இதனால் 2 தொகுதிகளை ஏற்று கூட்டணி ஒப்பந்தத்தில் ராமதாஸ் கையெழுத்திடுவார்என்று கூறப்படுகிறது. தேவைப்பட்டால் திமுகவும் தனது தொகுதியில் ஒன்றைபாமகவுக்குத் தரும் என்றும் தெரிகிறது.
| TAMILNADU NEWS | INDIA NEWS |
| [an error occurred while processing this directive] |
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications