நுழைவு தேர்வு-விண்ணப்ப வினியோகம் தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில் கல்வி படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்ப வினியோகம் இன்று தொடங்கியது.
தொழில் கல்வி நுழைவுத் தேர்தவு மே 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில்நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி இன்று தொடங்கியது.சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவப்பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
இது தவிர தமிழகம் ழுவதும் 52 ஆன்லைன் மையங்களிலும் விண்ணப்பங்கள்வழங்கப்படுகிறது. இணைய தளம் மூலம் விண்ணப்பங்களைப் பெற்று உடனுக்குடன்நுழைவுச் சீட்டும் வழங்கப்படுகிறது.
முதல் நாளான இன்றே அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பங்களைப் பெறமாணவ, மாணவியர் கூட்டம் அலை மோதியது.
தபால் மூலம் விண்ணப்பத்தை சமர்பிக்க மே 2ம் தேதியும், ஆன்லைன் மூலம்விண்ணப்பங்களை வழங்க இம்மாதம் 28ம் தேதியும் கடைசி நாள் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications