திமுகவில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி
சென்னை:
முன்னாள் அதிமுக அமைச்சர் இந்திரகுமாரி, இன்று கருணாநிதி முன்னிலையில்திமுகவில் இணைந்தார்.
ஜெயலலிதா தலைமையில் அமைந்த முதல் அமைச்சரவையில் அமைச்சராகஇருந்தவர் இந்திர குமாரி. சமூகநலத்துறை அமைச்சராக இருந்த இவர் மீது பின்னர்ஆட்சிக்கு வந்த திமுக இலவச சேலை மோசடி தொடர்பாக ஊழல் வழக்குப்போட்டது.ரூ. 11.42 கோடி அளவுக்கு ஊழல் செய்ததாகப் போடப்பட்ட வழக்கில் கடந்த 2003ம்ஆண்டில் இந்திர குமாரியை சிறப்பு நீதிமன்றம் விடுவித்துவிட்டது. ஆனால், அதைஎதிர்த்து ஜெயலலிதா அரசு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அந்தவழக்கு நிலுவையில் உள்ளது.
அமைச்சராக இருந்தபோது தனது மகளை நடிகர் நான் தாண்டா போலீஸ் டாக்டர்ராஜசேகரின் தம்பி நடிகர் செல்வாவுக்குத் திருமணம் முடித்து வைத்தார் இந்திரகுமாரி.
ஆரம்பத்தில் ஜெயலலிதாவின் முழு நம்பிக்கையைப் பெற்றிருந்த இந்திரகுமாரிபின்னர் அதை இழந்தார். இதையடுத்து தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தார்.காவி உடையெல்லாம் அணிந்து அரசியல் சன்யாசம் வாங்கினார்.
இந் நிலையில் இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்தார். அவருடன் 2,000க்கும்மேற்பட்ட பெண்களும் அறிவாலயம் வந்தனர். அங்கு திமுக தலைவர் கருணாநிதிமுன்னிலையில் இந்திரகுமாரியும் மற்றவர்களும் திமுகவில் இணைந்தனர்.
நிகழ்ச்சியின்போது கருணாநிதி பேசுகையில், இந்திரகுமாரி பேசும்போதுபுத்துணர்ச்சியும், புதிய எழுச்சியும் தமிழகத்தில் உருவாக உள்ளதாக தெரிவித்தார்.அதை நான் அப்படியே ஆமோதிக்கிறேன்.
இங்கு வந்துள்ள 2,000 பேர் மட்டுமல்ல, தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் உள்ளமகளிரை திமுகவில் இணைத்து சரிபாதிப் பெண்கள் திமுக பக்கம் இருக்கிறார்கள்என்று உணர்த்த இந்திரகுமாரி உழைக்க வேண்டும்.
பெண்ணியத்திற்காக பாடுபடுவதை, வாதாடுவதை எனது கடமைகளில் ஒன்றாககருதும் நான் உங்கள் அனைவரையும் நல்ல எண்ணத்தோடு வரவேற்கிறேன் என்றார்கருணாநிதி.
பின்னர் இந்திரகுமாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், தொண்டர்களை மதிக்கிறகட்சியாக அதிமுக இல்லை, தொண்டர்களை மதிக்கும் தலைமை அங்கு இல்லை.
எனவேதான் தொண்டர்களை மதிக்கிற தலைவரான கலைஞரை நாடி இங்குவந்துள்ளேன். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திக கூட்டணியின்வெற்றிக்காக தீவிரப் பிரசாரம் செய்யவுள்ளேன் என்றார் இந்திரகுமாரி.
ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்து வந்த சேடப்பட்டி முத்தையாவைத்தொடர்ந்து தற்போது இந்திரகுமாரி திமுகவில் இணைந்திருப்பது அதிமுகவட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிருப்தியில் உள்ள அதிமுகவினரை அடையாளம் கண்டு திமுகவுக்குள் இழுத்துவரும் அசைன்மெண்டை மத்திய உள்துறை இணையமைச்சரும் முன்னாள்அதிமுககாரருமான ரகுபதியிடம் கருணாநிதி கொடுத்துள்ளார்.
அவர் தான் பாக்கியராஜ், சேடப்பட்டி, இந்திரகுமாரி ஆகியோரை வலைவீசிப்பிடித்தார் என்று கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications