ஐயா ஆட்சி, அம்மா ஆட்சி, அடுத்து தம்பி ஆட்சி!
சென்னை:
தமிழக மக்கள் ஐயா ஆட்சி, அம்மா ஆட்சியைப் பார்த்து விட்டனர். அடுத்து பாஜகஎன்ற தம்பி ஆட்சியைப் பார்க்கவுள்ளனர் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கையாநாயுடு கூறியுள்ளார்.
பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் சென்னையில்நடந்தது. இதில் நாயுடு பேசுகையில்,இரண்டு திராவிடக் கட்சிகளும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிப் பேசி வருகிறார்கள்.குடும்ப ரீதியிலான அரசியலும், வாரிசு அரசியலும் இங்கு தலைவிரித்தாடுகிறது.
இரண்டு கட்சிகளுமே சந்தர்ப்பவாத கட்சிகள், இவர்களது கூட்டணிகளும்சந்தர்ப்பவாத கூட்டணிகள். ராஜீவ் காந்தியைக் கொன்ற கட்சி என்று திமுகவைகாங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. ஆனால் இப்போது அதே திமுகவுடன் காங்கிரஸ்கூட்டணி வைத்துள்ளது.
திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளை விட பாஜக கூட்டணி வலுவாக உள்ளது (தைசிரிக்காமல் சொன்னார் நாயுடு). எங்களது கூட்டணியின் வெற்றி உறுதி. இப்படிப்பட்டகூட்டணியைத்தான் மக்கள் எதிர்பார்த்தார்கள்.
எந்தக் கூட்டணியிலும் இல்லாத வகையில் எங்களது கூட்டணியில் அதிக அளவிலானகட்சிகள் இடம் பெற்றுள்ளன.
ஐயா ஆட்சி, அம்மா ஆட்சி என இரு ஆட்சிகளையும் தமிழக மக்கள் பார்த்துவிட்டார்கள். அடுத்து பாஜக என்ற தம்பி ஆட்சியை மக்கள் பார்க்கப் போகிறார்கள்என்றார்.
வேட்பாளர்கள் அனைவரும் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் மெரீனா கடற்கரையில்உள்ள காந்தி சிலைக்கு வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் சென்றனர். அங்கு காந்திசிலை முன்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந் நிகழ்ச்சியில் பாஜக தலைவர்கள் தவிர கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும்கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications