வாசன் வீட்டில் காங்கிரஸார் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.சுந்தரத்தைமாற்றக் கோரி அத்தொகுதி காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள் இன்று சென்னையில்உள்ள மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்நடத்தினர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளசுந்தரத்திற்கு அக்கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சுந்தரம் மீது பணமோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் நெல் கடத்தல் வழக்கில் அவர்நீதிமன்றத்தால் குற்றவாளியாகாவும் அறிவிக்கப்பட்டவர்.

எனவே அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று அக்கட்சியினர் கோரிவருகின்றனர்.

இந் நிலையில் ஆத்தூர் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பேருந்துகளில்இன்று வாசன் வீட்டுக்கு வந்தனர். அவரது வீட்டை முற்றுகையிட்டு சுந்தரத்தைஉடனடியாக மாற்றக் கோரி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது வீட்டில் இருந்த வாசன், நிர்வாகிகளையும், தொண்டர்களையும் வீட்டுக்குள்அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார்.

புதுவை: காங்.கை எதிர்க்கும் சிபிஎம்

இதற்கிடையே பாண்டிச்சேரி மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைமட்டும் எதிர்த்து சில தொகுதிகளில் போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமுடிவு செய்துள்ளது.

அதேசமயம், காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, பாமக, இந்தியகம்யூனிஸ்ட் கட்சிக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி புதுவையில் நூதன நிலையை எடுத்துள்ளது. அங்கு காங்கிரஸ்தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி இடம்பெறவில்லை.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை எதிர்த்து சில தொகுதிகளில் மட்டும்போட்டியிட அக்கட்சி முடிவு செய்துள்ளது.

அதேசமயம் திமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கு முழுஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் தேசிய குழு உறுப்பினர்டி.கே.ரங்கராஜன் கூறுகையில்,

தமிழகத்தைப் போலவே புதுவையிலும் அதிமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்றுநாங்கள் தீவிரமாக உள்ளோம். எனவே தமிழகத்தைப் போலவே புதுவையிலும்ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு எங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளோம்.

அதேசமயம், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சில தொகுதிகளில் போட்டியிட முடிவுசெய்துள்ளோம். மற்ற தொகுதிகளில் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிறகட்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+