தரிசு நிலம்: கருணாநிதிக்கு ஜெ. பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் தனியாரிடம் உள்ள தரிசு நிலங்களையும், அரசு நிலங்கள் என்று தவறானதகவல்களைக் கூறி மக்களை திசை திருப்பப் பார்க்கிறார் கருணாநிதி என முதல்வர்ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 55 லட்சம் ஏழை, எளிய விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம்வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததற்குமுதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்திருந்தார்.

அதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் மொத்தமே மூன்றரை லட்சம் ஏக்கர் தரிசுநிலம்தான் உள்ளது. இப்படி இருக்கையில், 55 லட்சம் பேருக்கு எப்படி தலா 2 ஏக்கர்நிலம் தர முடியும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த கருணாநிதி, 2001-02ம் ஆண்டு ஜெயலலிதா அரசுசட்டசபையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகத்தில் 50 லட்சம் தரிசு நிலம்இருப்பதாக கூறியிருந்ததை சுட்டிக் காட்டி ஆதாரத்துடன் ஜெயலலிதாவுக்கு பதிலடிகொடுத்தார்.

இதற்கு தற்போது ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். திருச்செந்தூர்தொகுதிக்குட்பட்ட தெற்கு ஆத்தூரில் பிரசாரம் மேற்கொண்ட ஜெயலலிதா இடையேசெய்தியாளர்களிடம் பேசுகையில்,

கருணாநிதி ஒரு தவறான வாக்குறுதியை அளித்து விட்டார். தற்போது அதைநியாயப்படுத்த தவறான தகவல்களைத் தந்து கொண்டுள்ளார்.

அதிமுக தாக்கல் செய்த பட்ஜெட்டில் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம், 20 லட்சம்ஹெக்டேர் ஒருங்கிணைந்த தரிசு நல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது என்று தான் கூறியிருக்கிறோமே தவிர, அந்த 50 லட்சம் ஏக்கர் தரிசுநிலமும் அரசுக்குச் சொந்தம் என்று எங்கேயும் கூறவில்லை.

எனவே நான் சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை. நான் சொன்னதை மீண்டும்வலியுறுத்துகிறேன்.

நாங்கள் தாக்கல் செய்த பட்ஜெட்டில், தமிழ்நாட்டில் உள்ள 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலசாகுபடியின் கீழ் கொண்டு வரப்படும் என்றுதான் சொல்லியிருக்கிறோமே தவிர, அந்த50 லட்சம் ஏக்கர் நிலமும் அரசுக்குச் சொந்தமானது என்று கூறவில்லை.

இதை அவர்களே வேண்டுமானால் நிதி நிலை அறிக்கையில் மீண்டும் படித்துப்பார்க்கலாம்.

தமிழகத்தில் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. இதில் மூன்றரை லட்சம் ஏக்கர்நிலம்தான் அரசுக்குச் சொந்தமானது. மற்றவை எல்லாம் பட்டா நிலங்கள்,தனியாரிடம் உள்ளவை.

ஒவ்வொருவரிடமும் 1 ஏக்கர், 2 ஏக்கர் என்ற அளவில் உள்ளது. சிறு விவசாயிகள்அந்த நிலத்தை வைத்துள்ளனர். ஏழ்மை காரணமாக பயிரிட முடியாமல் தரிசுநிலங்களாக வைத்துள்ளனர்.

அதேபோல கிலோ அரிசியை 2 ரூபாய்க்குக் கொடுக்கப் போவதாக கருணாநிதிகூறுவதும் ஏமாற்று வேலை. ஏற்கனவே கடந்த திமுக ஆட்சிக் காலத்தில்தான் 2ரூபாய்க்குக் கொடுக்கப்பட்டு வந்த ரேஷன் அரிசி விலையை ரூ. 3.50 எனஉயர்த்தினார் கருணாநிதி.

அவரே விலையை உயர்த்தி விட்டு இப்போது தேர்தலுக்காக 2 ரூபாய்க்கு கிலோஅரிசி கொடுக்கப் போவதாக கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் என்றார்ஜெயலலிதா. (நீங்க மட்டும் தேர்தலையொட்டி முன்பு வாபஸ் பெற்ற பலசலுகைகளை மீண்டும் தந்து பல்டி அடித்தீர்களே?)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+