இலங்கை ராணுவம்-சிங்கள வெறியர்கள் வெறியாட்டம்: 10 தமிழர்கள் கொலை
திரிகோணமலை:
இலங்கையில் 10 தமிழர்களை சிங்கள வெறியர்களும் ராணுவமும் சேர்ந்து படுகொலை செய்துள்ளனர். மேலும்தமிழர்களின் கடைகளும் எரிக்கப்பட்டுள்ளன.
இதனால் இலங்கையில் மீண்டும் இனக் கலவரம் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராணுவமே நடத்தியுள்ள இத்தாக்குதலையடுத்து பிரதமர் மன்மோகன் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமையை நேரில் விசாரித்தார்.தமிழர்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டுப்படுத்துமாறும், உரிய இழப்பீட்டை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
கடந்த வாரத்தில் திரிகோணமலை தமிழ் மக்கள் பேரவையின் தலைவரான விக்னேஸ்வரன் இலங்கைராணுவத்தின் உதவியுடன் கொலை செய்யப்பட்டார். தமிழ் எம்பியாக பதவியேற்க நிலையில் அவர்கொல்லப்பட்டார்.
இதையடுத்து நடந்த கண்ணிவெடித் தாக்குதல்களில் பல கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந் நிலையில் திரிகோணமலையில் ஒரு ராணுவ வீரர் குண்டு வெடிப்பில் பலியானார். இதைத் தொடர்ந்துராணுவத்தினர், கடற்படையினர், சிங்கள வெறியர்கள் ஆகியோர் கூட்டாக தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதில் 10 தமிழர்கள் படுகொலை ஆயினர். 45க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர்.தமிழர்களுக்குச் சொந்தமான 20 கடைகள் எரிக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து தமிழர்கள் நடத்திய எதிர் தாக்குதலில் 5 சிங்களர்கள் கொலை செய்யப்பட்டனர். இப்போதுதிரிகோணமலையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஜெனீவாவில் நடக்கும் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளப் போவதாக விடுதலைப் புலிகள்அறிவித்துள்ளனர். ஆனால், பேச்சுவார்த்தையை திட்டமிட்டபடி 19ம் தேதிக்குப் பதிலாக சில நாட்கள் தள்ளிவைக்க வேண்டும் என புலிகளின் அரசியல் செயலகத் தலைவர் பூலித் தேவன் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications