அரசியலில் பலவீனமாகிவிட்ட கருணாநிதி-திருமா
திருவண்ணாமலை:
திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல திட்டங்களில் தொலைநோக்குப்பார்வை இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் அதிமுக வேட்பாளர் பவுன்குமாரை (இவர் மார்வாடிஎன்கிறார்கள்) ஆதரித்து நடந்த பிரசாரப் பொதுக் கூட்டத்தில் திருமாவளவன்பேசுகையில்,தமிழகத்தில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் இலவசமாக டிவி தரப் போவதாககருணாநிதி கூறுவதில் தொலைநோக்குப் பார்வையோ அல்லது மக்கள் நலஎண்ணமோ இல்லை.
தனது குடும்பம் நடத்தும், தனது பேரன் நடத்தும் தொழில் நன்கு வளர்ச்சி அடையவேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த டிவி திட்டத்தை அவர் அறிவித்துள்ளார்.
டிடிஎச் என்ற திட்டத்தை கருணாநிதியின் பேரன் கலாநதி மாறன் விரைவில்தொடங்கப் போகிறார். அத்தொழில் நன்கு வளர்ச்சி அடைய வேண்டுமேஎன்பதற்காகத்தான் இந்த இலவச டிவியை அறிவித்துள்ளார் கருணாநிதி.
ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்காக மாபெரும் இயக்கமான திமுகபலியிடப்பட்டிருக்கிறது. அரசியலில் பலவீனப்பட்டுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.
அதைத்தான் அவரது அறிவிப்புகள் வெளிக்காட்டுகின்றன. இலவச டிவி, 2 ரூபாய்க்குகிலோ அரிசி, இலவச எரிவாயு அடுப்பு ஆகிய அறிவிப்புகள் எல்லாம்கவர்ச்சிகரமான அறிவிப்புகளே தவிர மக்களின் வாழ்க்கைத் தரத்திற்குஎந்தவிதத்திலும் உபயோகப் படாத அறிவிப்புகள் ஆகும்.
அதேசமயம், முதல்வர் ஜெயலலிதா மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வரும் இலவசசைக்கிள் திட்டம் சமூக கண்ணோட்டத்துடன் கூடிய திட்டம். பள்ளிப் படிப்பைமாணவ, மாணவியர் பிளஸ்டூ வரை தங்கு தடையின்றி மேற்கொள்ளவும், தொடர்ந்துமேற்படிப்பை முடிக்கவும் இந்த சைக்கிள் திட்டம் வெகுவாக உபயோகப்பட்டுவருகிறது.
வரும் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டி ஜனநாயக ஆட்சி மலர,ஜெயலலிதா ஆட்சி தொடர வாக்களியுங்கள் என்றார் திருமாவளவன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications