ஆண்டிப்பட்டியில் நாளை ஜெ வேட்பு மனு தாக்கல்
மதுரை:
முதல்வர் ஜெயலலிதா ஆண்டிப்பட்டி தொகுதியில் நாளை வேட்பு மனு தாக்கல்செய்கிறார். அனைத்து அதிமுக வேட்பாளர்களும் நாளையே வேட்பு மனுக்களைத்தாக்கல் செய்கின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஆண்டிப்பட்டி தொகுதியிலேயே போட்டியிடுகிறார்.இதற்கான வேட்பு மனுவை நாளை அவர் தாக்கல் செய்கிறார். இதற்காக ஆண்டிப்பட்டிவரும் ஜெயலலிதாவை வரவேற்கவும் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.நாளை மனு தாக்கல் செய்ய முடியாத அதிமுகவினர் திங்கள்கிழமை மனு தாக்கல்செய்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சாதனைகள் நிறைந்தது என் அரசு:
இதற்கிடையே மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகையில், வீரப்பனை ஒழித்த சாதனை, வறட்சி,வரலாறு காணாத கன மழை, சுனாமி என பல்வேறு சவால்களை சந்தித்த சாதனை என இந்த அரசு சாதனைகள் நிரம்பிய அரசாக உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை மூலம் நீர்ப்பாசனம் பெறும் மாவட்டங்களில் மதுரை மாவட்டமும் ஒன்று. குறிப்பாக மேலூர் பகுதி விவசாயிகள்தான் இந்தபாசனத்தின் கடை மடைப் பகுதி விவசாயிகளாக உள்ளனர். முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசுவழக்குப் போட்டது.
இந்த வழக்கில் அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்துமாறு உச்சநீதிமன்றம், கேரள அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை மீறிஅம்மாநில சட்டசபையில், சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
தமிழக விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள உங்கள் அன்புச் சகோதரியின் அரசு, பெரியாறு அணை விவகாரத்திலும் தமிழக உரிமையை விட்டுக்கொடுக்காமல் செயல்படும். 152 அடி அளவுக்கு நீரைத் தேக்கும் வகையில் அதிமுக அரசு தொடர்ந்து செயல்படும். தமிழக விவசாயிகளின் உரிமைபாதிக்க நான் அனுமதிக்க மாட்டேன் என்றார் ஜெயலலிதா.
தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்ட ஜெயலலிதா திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் அமைச்சர் விஸ்வநாதனுக்கு ஆதரவு கேட்டு பேசினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications