முன்னாள் அதிமுக எம்.பி. தற்கொலை
கோவை:
மன்னாள் அதிக எம்.பி. அண்ணா நம்பி, மனைவி இறந்த துக்கம் தாளாமல் விஷம்குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை ஆர்.எஸ்.புரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வந்தவர்அண்ணா நம்பி. முன்னாள் எம்.பியான இவருக்கு ஜானகி என்ற 60 வயது மனைவிஇருந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஜானகி உடல் நலக்குறைவால் இறந்து போனார்.மனைவி இறந்தது முதல் அண்ணா நம்பி பெரும் சோகத்துடன் காணப்பட்டார்.
அவருடன் அண்ணா நம்பியின் தம்பி மகன் செந்தில் மட்டும் துணைக்கு இருந்தார்.மனைவி இறந்த வேதனையில் தவித்த அண்ணா நம்பி, செந்தில் வீட்டில் இல்லாதநேரம் பார்த்து மதுவில் விஷம் கலந்து அதைக் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
வீடு திரும்பிய செந்தில் தனது பெரியப்பா இறந்து கிடப்பதைப் பார்த்து போலீஸுக்குத்தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறந்த பேச்சாளரான அண்ணா நம்பிக்கு வயது 66. ஆரம்பத்தில் அதிமுவில்இருந்தார். 1984ம் ஆண்டு பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுவெற்றி பெற்றார்.
பின்னர் 1989ம் ஆண்டு அவினாசி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில்போட்டியிட்டு வெற்றி பெற்றார். மறுபடியும் 1996ல் பொள்ளாச்சி எம்.பி.தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் தோல்வி அடைந்தார்.
பின்னர் அதிமுகவிலிருந்து விலகி மதிமுகவில் இணைந்தார். கடந்த 2001ம் ஆண்டுநடந்த சட்டசபைத் தேர்தலில் அவினாசி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத்தழுவினார்.
இத்தோல்வியைத் தொடர்ந்து மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.திமுகவில் இருந்தாலும் தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications