கேரள பிரசாரத்தை ரத்து செய்தார் ஜெயலலிதா
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தனது கேரள மாநிலப் பிரசாரக் கூட்டத்தை ரத்து செய்துவிட்டார்.
கேரளாவில் முதல் முறையாக அதிக அளவிலான தொகுதிகளில் அதிமுகபோட்டியிடுகிறது.தமிழகத்தில் தன்னுடன் கூட்டணி வைக்க யாருமே முன் வராத நிலையில் காங்கிரஸ்அதிருப்தியாளரான கருணாகரனின் கட்சி, திண்டிவனத்தின் கட்சி, டி.ராஜேந்தர்ஆகியோரோடு கூட்டணி அமைக்க முடிவு செய்தார் ஜெயலிலதா.
இதையடுத்து உளவுப்பிரிவு மற்றும் நடராஜன் உள்ளிட்டோரின் உதவியோடுமதிமுகவும், அதற்கு முன் விடுதலைச் சிறுத்தைகளும் கூட்டணிக்குள் வந்தனர்.
இந் நிலையில் கருணாகரனை சமாதானப்படுத்திய காங்கிரஸ் அவரோடு கூட்டணிவைத்துவிட்டது. இதையடுத்து திண்டிவனம், கருணாகரன், டி.ஆர் ஆகியோரை விட்டுவிலகிவிட்டது அதிமுக.
முதலில் கருணாகரன் கட்சிக்கு தமிழகத்தில் மலையாளிகள் அதிகம் வசிக்கும்தொகுதிகளை ஒதுக்கவும், கேரளத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில்அவருடன் கூட்டணியுடன் அதிமுக போட்டியிடுவது என்றும் ஜெயலலிதாதிட்டமிட்டிருந்தார்.
ஆனால், அது நடக்காமல் போய்விட்டாலும் கேரளத்தில் தனியாகப்போட்டியிடுவதாக அறிவித்தார் ஜெயலலிதா. அங்கு சுமார் 50 இடங்களில் அதிமுகபோட்டியிடுகிறது.
கேரள மாநில அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சித்தூர் என்ற இடத்தில் வரும் 20ம்தேதி பிரசாரக் கூட்டத்தில் பேச ஜெயலலிதா திட்டமிட்டிருந்தார். தற்போது அந்தகூட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது.
அதற்குப் பதிலாக அன்றைய தினம் பொள்ளாச்சியில் (பொள்ளாச்சிக்கு அருகில்தான்சித்தூர் உள்ளது குறிப்பிடத்தக்கது) ஓய்வு எடுக்கிறார். அதன் பின்னர் அவர் கோவைபுறப்பட்டுச் செல்கிறார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், மதுரை, தேனி உள்ளிட்ட ஐந்து மாவட்டவிவசாயிகள் கேரள அரசு மீது கடும் கோபத்துடன் இருக்கும் நிலையில், கேரளாவில்என்ன சொல்லி பிரச்சாரம் செய்வது என்ற சிக்கல் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ளது.
அங்கு போய் பிரசாரம் செய்யும்போது முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து பேசமுடியாது. பேசாமல் வந்தால் அது தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால் தனது கேரள பிரசார திட்டத்தையே ஜெயலலிதா ஒட்டுமொத்தமாககைவிட்டுவிட்டார்.
முதல்வரின் பயணம் ரத்து செய்யப்பட்டு விட்டாலும் கூட அதிமுகவைச் சேர்ந்தநடிகர், நடிகையர் பட்டாளத்தை கேரளாவுக்கு அனுப்பி தீவிரப் பிரசாரம்மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications