திமுகவுக்கு உதவ டிஆருக்கு கருணாநிதி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எனது முதல் சுற்றுப் பிரசாரத்தின்போது மக்களிடம் ஐந்து மடங்கு அதிக எழுச்சியைக்கண்டேன். இந்த சுற்றுப்பயணம் பிரமாண்ட வெற்றியாக அமைந்துள்ளதாக திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

வடக்கு மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை முடித்துள்ள திகதலைவர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பினார். பின்னர் மாலையில்சேப்பாக்கம் தொகுதியில் வீதி வீதியாகசென்று பிரசாரம் மேற்கொண்டார்.

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

தொடர்பான செய்திகள்பு நான் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது மக்களிடம் காணப்பட்டஎழுச்சி, உற்சாகத்தை விட ஐந்து மடங்கு அதிக உற்சாகத்தையும், எழுச்சியையும்எனது முதல் கட்டப் பிரசாரத்தின்போது காண நேர்ந்தது.

எனது முதல் கட்டப் பிரசார பயணம் பிரமாண்ட வெற்றியாக அமைந்துள்ளது. மக்கள்எழுச்சியுடன் உள்ளனர்.

Karunanithi

தரிசு நிலம் தொடர்பாக திரும்பத் திரும்ப ஒரே பொய்யையே கூறி வருகிறார்ஜெயலலிதா. ஒரு பொய்யை திரும்பத் திரும்பக் கூறினால் மெய்யாகி விடும் என்றஅடிப்படையில் அவர் பேசி வருகிறார்.

லட்சிய திமுக தலைவரும், இயக்குனருமான தம்பி விஜய டி.ராஜேந்தர் திமுககூட்டணிக்குப் பலம் சேர்க்கும் வகையில், திமுக கூட்டணியின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் போட்டியிலிருந்து விலகிக் கொண்டு கூட்டணிக்கு ஆதரவாகசெயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

ஜெ ஆட்சிக்கு 8ம் தேதி முடிவு:

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் வீதி வீதியாகச் சென்று பிரசாரம் செய்தகருணாநிதிக்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பு தரப்பட்டது.

வீட்டின் மாடிகளிலிருந்து மலர்கள் தூவப்பட்டன. ஜனக் கடலின் நடுவே மிதந்தபடிசென்ற கருணாநிதி போஸ் சாலை சந்திப்பில் பேசுகையில்,

திமுக ஆட்சி காலத்தில் எந்த முக்கிய முடிவை எடுத்தாலும், சம்பந்தப்பட்டதுறையினரை கலந்து ஆலோசித்த பின்னரே எடுத்தோம். மின்சாரக் கட்டணத்தைஉயர்த்துவதாக இருந்தாலும், பட்ஜெட் போடும்போதும், வரி விதிப்புகளும்சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னரே எடுக்கப்பட்டன.

ஆனால் இப்போதுள்ள ஆட்சியாளர்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்பட்டுவருகிறார்கள். அந்த ஆட்சிக்கு வரும் 8ம் தேதி முடிவு கட்ட வேண்டும்.

முன்பு சத்துணவுடன் முட்டை தருவதற்குப் பதிலாக லட்டு தரப்படும் என்றுஜெயலலிதா அறிவித்து செயல்படுத்தினார். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில்படுதோல்வியை சந்தித்ததும், மீண்டும் முட்டையைக் கொண்டு வந்தார்.

ஆனால் நாங்கள் வாரம் இருமுறை முட்டை தரப் போகிறோம் என்றார் கருணாநிதி.

தமிழகத்தில் கிலோ அரிசியை 2 ரூபாய்க்கு தருவதாகச் சொல்லும் கருணாநிதிக்குவக்காலத்து வாங்கும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தால் இந்தியா முழுவதும்கிலோ அரிசு ரூ. 2க்கு தர முடியுமா? என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோகேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் தொடர்ந்து பேசிய கருணாநிதி, இந்தியாமுழுமைக்கும் மே 8ம் தேதி தேர்தல் நடந்தால் நானும், இந்தியா முழுமைக்கும் 2ரூபாய்க்கு அரிசி தருகிறேன் என்றார்.

டி.ஆருக்கு கோரிக்கை:

இதற்கிடையே என்னை அரசியல் குரு என்று கூறி தனது பண்பட்ட அரசியலைவெளிப்படுத்திய விஜய டி.ராஜேந்தர் தான் நிறுத்தியுள்ள 11 வேட்பாளர்களையும்வாபஸ் பெற்று திமுக கூட்டணியின் வெற்றிக்கு உதவிட வேண்டும் என்று கருணாநிதிகோரிக்கை விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+