கருணாநிதி, விஜய்காந்த் வேட்பு மனு தாக்கல்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்தார்.
சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 13ம் தேதி தொடங்கியது. 14மற்றும் 16 ஆகிய இரு நாட்களும் விடுமுறை தினங்கள் என்பதால் வேட்பு மனுதாக்கல் நடைபெறவில்லை. முதல் நாளில் பல்வேறு கட்சிகளைசத் சேர்ந்தபிரபலங்கள் மனுதாக்கல் செய்தனர்.15ம் தேதி தல்வர் ஜெயலலிதா, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர்மனு தாக்கல் செய்தனர். இன்று மிகவும் நல்ல நாள் என்பதால் பெரும்பாலானகட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்கின்றனர்.
சென்னை கடற்கரைச் சாலை எழிலகம் வளாகத்தில் உள்ள நில நிர்வாகத் துறை உதவிஆணையர் அலுவலகத்திற்கு இன்று நண்பகல் வந்த திமுக தலைவர் கருணாநிதி,அங்கு தேர்தல் அதிகாரி ஜோசப் கிறிஸ்துதாஸிடம் வேட்பு மனுவைத் தாக்கல்செய்தார்.
அவருடன் ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின், தயாநிதி மாறன், டி.ஆர்.பாலுஉள்ளிட்டோர் உடனிருந்தனர். கருணாநிதி வருகையையொட்டி ஆயிரக்கணக்கானதொண்டர்கள் அங்கு குவிந்திருந்தனர்.
இதேபோல சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆயிரம் விளக்குதொகுதிக்காக ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதேதொகுதியில்போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆதி ராஜாராமும் மனு தாக்கல் செய்தார்.
மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் முன்னாள் சபாநாயகர்பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு தொகுதிகளில்போட்டியிடும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் நன்மாறன், சேலம் 2 தொகுதியில் வீரபாண்டிஆறுமுகம், கும்பகோணத்தில் கோ.சி.மணி, கோவை கிழக்கில் பொங்கலூர்பழனிச்சாமி, கடையநல்லூல் பீட்டர் அல்போன்ஸ், நாங்குனேரியில் வசந்தகுமார்ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
நடிகர் விஜயகாந்த் இன்று விருத்தாச்சலத்தில் உள்ள உதவி ஆட்சியர் அலுவலகத்திற்குதொண்டர்கள் புடை சூழ சென்று விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியி வேட்பு மனுதாக்கல் செய்தார்.
அவர் மனு தாக்கல் செய்து கொண்டிருந்தபோது அதிமுக வேட்பாளர் காசிநாதன் தனதுஆதரவாளர்களுடன் அங்கு வந்தார். அவர்களை போலீசார் தடுத்து வெளியில்நிறுத்தினர்.
விஜய்காந்த் முடிச்சுட்டு வரட்டும், அப்புறம் நீங்க போகலாம் என்றனர். எங்கஆட்சியில எங்களையே நிக்க சொல்றீங்களா என வாய் விட்டபடியே உள்ளே புகவும்முயன்றனர்.
இதைக் கண்டு விஜய்காந்த் கட்சியினர் டென்சனாகவே, நிலைமை மோசமாவதைஉணர்ந்த போலீசார் அதிமுகவினர் மீது தடியடி நடத்தினர். இதில் 10 அதிமுகவினர்காயமடைந்தனர். அடி வாங்கிய பின்னரே அவர்கள் அடங்கினர்.
அமைச்சர்கள் சி.வி.சண்முகம் (திண்டிவனம்), கே.பி.அன்பழகன் (பாலக்கோடு),விஜயலட்சுமி பழனிச்சாமி (வீரபாண்டி),
முன்னாள் அமைச்சர்கள் தம்பித்துரை (பர்கூர்), எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்(குறிஞ்சிப்பாடி) ஆகியோரும் இன்று மனு தாக்கல் செய்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications