ஜெனீவா பேச்சுவார்த்தை: புலிகள் நிபந்தனை
கொழும்பு:
பேச்சுவார்த்தைக்கு இடையூறாக உள்ள தடைகளும், பேச்சுவார்த்தைக்குரிய சூழலும் அமையாத வரை ஜெனீவாஅமைதிப் பேச்சுக்களில் பங்கேற்க முடியாது என விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நார்வே தூதர் ஹான்ஸ் பிரட்ஸ்கருக்கு புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன்அனுப்பியுள்ள கடிதத்தில்,பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் முன் தமிழர் பகுதிகளில் நடந்த சமீபத்திய தாக்குதல்கள் குறித்து கிழக்குப் பகுதிகமாண்டர்களுடன் புலிகளின் தலைமை ஆலோசனை நடத்த வேண்டியது மிக அவசியமாகிறது.
ஆனால், அந்த கமாண்டர்கள் வன்னிப் பகுதிக்கு வருவதில் இலங்கை கடற்படையால் எழுந்துள்ள பாதுகாப்புஅச்சுறுத்தல்கள் பேச்சுவார்த்தைக்கு உரிய சூழலை ஏற்படுத்தவில்லை.
அவர்களால் பாதுகாப்பாக எங்கள் தலைமையைச் சந்தித்துப் பேச முடியாத வரை பேச்சுவார்த்தைகளில் நாங்கள்பங்கேற்பது சாத்தியமில்லை என்று கூறியுள்ளார்.
முன்பெல்லாம் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் புலிக் கமாண்டர்கள் வன்னித் தீவுக்கு அழைத்து வரப்பட்டனர்.ஆனால், இப்போது ஹெலிகாப்டர்களை தர இலங்கை மறுக்கிறது.
இதனால் கடல் வழியாக அவர்கள் வன்னிப் பகுதிக்கு வர முடிவு செய்தனர். ஆனால் நார்வேகண்காணிப்பாளர்களுடன் நிராயுதபாணியாக வந்த புலிகளின் கமாண்டர்கள் வந்த கப்பலை இலங்கை கடற்படைதொடர்ந்து வந்ததால் அந்தப் பயணத்தை புலிகள் ரத்து செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே திரிகோணமலையில் வெள்ளிக்கிழமை நடந்த வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆகஅதிகரித்துள்ளது.
பெங்களூர் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த வெங்கடசாமி வெங்கட்ராமன் (30) என்ற ஜோதிடர் உள்பட 3 பேரின்உடல்கள் மருத்துவமனையை அடைந்துள்ளன.
இதில் ஒருவர் 60 வயது பெண் ஆவார். அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே இன்று வவுனியா மாவட்டத்தில் கண்ணி வெடியில் மோதிய ராணுவ வாகனம் வெடித்துச்சிதறியதில் அதிலிருந்த 4 வீரர்கள் பலியாயினர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். கடந்த ஒரு வாரத்தில்மட்டும் 50 வீரர்கள் கண்ணி வெடிகளுக்குப் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமைதிப் பேச்சுவார்த்தை என்னவாகும் என்ற கவலை பரவியுள்ள நிலையில், தமழர் பகுதிகளுக்குள் கண்ணிவெடிகளைப் பதிக்க சிறப்புப் படைகளை ராணுவம் அனுப்பி வருவதாக புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications