கடுமையான போட்டி, தெளிவான முடிவு: ப.சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபைத் தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கிறது. ஆனால் முடிவு தெளிவாகஇருக்கும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்கூறினார்.

சென்னை மைலாப்பூரில் திமுக வேட்பாளர் நெப்போலியனுக்கு ஆதரவாக நடந்ததேர்தல் பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,

கலர் டிவி, 2 ரூபாய்க்கு கிலோ அரிசி, சமையல் எரிவாயு அடுப்பு ஆகியவற்றைத் தரமுடியுமா என்ற கேள்வி எழுப்புகிறார்கள் ஜெயலலிதாவும் வைகோவும்.

இந்தத் திட்டம் நல்லதா, கெட்டதா, தேவையா, இல்லையா என்பதல்ல இப்போதுபிரச்சினை. இதை நிறைவேற்ற முடியுமா, முடியாதா, சாத்தியம் உண்டா, இல்லையாஎன்பதுதான் கேள்வி.

தைரியம் இருந்தால் கலர் டிவி தராதே, 2 ரூபாய்க்கு அரிசி தராதே என்றுஜெயலலிதாவும் வைகோவும் பேசட்டும்.. பார்க்கலாம். அந்த தைரியம் இல்லாததால்தான் தர முடியுமா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

தருவதா வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டியது அதை தேர்தல் அறிக்கையில்சொல்லியுள்ள திமுக தலைமை தான். அதே போல அதைப் பெறுவதா வேண்டாமாஎன்று முடிவு செய்ய வேண்டியது வாக்களிக்கப் போகிற மக்கள்.

இடையில் இவர்கள் யார் தர முடியுமா என்று கேட்பதற்கு. தைரியமிருந்தால் தராதேஎன்று சொல்லட்டும் பார்க்கலாம்.

இதெல்லாம் தர முடியுமா என்று என்னைக் கேட்டால், நான் ஆய்ந்து பார்த்த வரையில்,சாத்தியமானது என்றுதான் சொல்வேன்.

திமுக ஆட்சியால் இதை சாத்தியமாக்க முடியும். மக்களுக்குத் தேவை என்றால்நிறைவேற்றித்தானே ஆக வேண்டும்.

5 நாட்களுக்கு முன்பு ஆயிரம் ரூபாய் கொடுத்தார்களே என்று ஓட்டுப் போடக்கூடாது. கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியைப் பாருங்கள், அதை ஆய்வுசெய்யுங்கள், சிந்தித்து ஓட்டுப் போடுங்கள். அதுதான் நியாயமானதாக இருக்கமுடியும்.

தமிழகத்தில் கடந்த காலங்களில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டவர்கள்தான்வெற்றி பெற்றுள்ளனர். இம்முறையும் அப்படித்தான் நடக்கும். அதிலும் காங்கிரஸ்கட்சி இடம்பெற்றுள்ள கூட்டணிக்கே தொடர்ந்து வெற்றி கிடைத்து வருவதுதனிப்பட்ட முறையில் எனக்குப் பெருமையாக உள்ளது.

ஜெயலலிதா திருந்தவில்லை, திருந்தவும் மாட்டார். அவர் யாரையும் மதிப்பதில்லை,குளறுபடியான நிர்வாகத்தைக் கொடுத்தவர் அவர்.

கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் ஐந்து தலைமைச் செயலாளர்கள், 4 உள்துறைச்செயலாளர்கள், ஐந்து டிஜிபிக்கள், 8 மாநகராட்சி ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.இதெல்லாம் கோமாளித்தனமான செயல்களையே காட்டுகிறது.

இங்குள்ள கூட்டத்தினரைப் பார்த்துக் கேட்கிறேன்.. தமிழகத்தின் தொழில்துறைஅமைச்சர் யார்? யாருக்காவது தெரியுமா?.. எனக்கே தெரியாது. காரணம், 5வருடத்தில் 9 தொழில் அமைச்சர்களை மாற்றிவிட்டார் ஜெயலலிதா.

நாட்டின் நிதியமைச்சரான எனக்கே தமிழக தொழில்துறை அமைச்சர் யார் என்றுதெரியாத நிலை. இது தான் ஜெயலலிதாவின் கோமாளி ஆட்சியில் நிலை.

சரி.. இப்போது தமிழகத்தில் நிதியமைச்சர் யார்..? அப்படி ஒருவர் கொஞ்சநாட்களுக்கு முன் இருந்தார். இப்போது அவரை எங்கும் காண முடியவில்லை.இப்போது அந்தத் துறைக்கு யார் பொறுப்பாக இருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.இது கோமாளி ஆட்சியின் உச்சகட்டம் அல்லவா?

கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு மத்தியஅரசுதான் நிதியுதவி அளித்தது. பல திட்டங்களை தமிழகத்திற்குக் கொண்டுவந்துள்ளோம்.

தமிழக அரசின் இலவச சைக்கிள் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 31 கோடி ஒதுக்கியது.இதில் ரூ. 21.70 கோடி கடன், ரூ. 9.30 கோடி மானியம். இதை ஜெயலலிதா மறுக்கமுடியுமா?

சுனாமிக்கு மட்டும் மத்திய அரசு ரூ. 5,025 கோடி நிதியை தமிழகத்திற்கு வழங்கியது.நிவாரணம் மற்றும் புனரமைப்பு பணிகளுக்கு இவை வழங்கப்பட்டுள்ளன. இதைஜெயலலிதா மறுப்பாரா?

ஒரு விஷயம் மட்டும் உண்மை. தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கிறது. ஆனால்முடிவு தெளிவாக இருக்கும். திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்,கருணாநிதியே மீண்டும் முதல்வர் ஆவார் என்றார் சிதம்பரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+