கம்யூனிஸ்டுகள் வேஸ்ட்: ராதாரவி சொல்கிறார்
அவினாசி:
இதுவரை சேர்த்து வைத்த சொத்துக்களைக் காக்கவே மீண்டும் முதல்வர் பதவியில்அமர துடிக்கிறார் கருணாநிதி என நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
கோவை மாவட்டம் அவினாசியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பிரேமாவைஆதரித்து ராதாரவி பிரசாரம் செய்தார். அப்போது , எனக்கு திமுகவை 28 ஆண்டுகள்தெரியும். எனக்கே 28 ஆண்டுகள் என்றால், எனது அப்பாவுக்கு எத்தனை வருடசர்வீஸ் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.கருணாநிதி நாட்டுக்குத் தலைவன் அல்ல, ஒரு குடும்பத்திற்கு மட்டுமே அவர்தலைவர். நாட்டைக் காக்க அவர் அரசியலில் ஈடுபடவில்லை. இதுவரை சேர்த்துவைத்துள்ள சொத்துக்களைக் காக்கவே அவர் அரசியலில் இருக்கிறார், முதல்வர்பதவிக்கு வர துடிக்கிறார்.
அவினாசி தொகுதி வாக்காளர்களே, இத்தொகுதியில் கம்யூனிஸ்ட்காரர்கள்நிற்கிறார்கள். அவர்கள் எதற்கும் உபயோகப்படாதவர்கள். அவர்களை நம்பி ஏமாந்துவிடாதீர்கள் என்றார் ராதாரவி.
ரூ. 40 கோடி: சந்திரசேகர் தாக்கு:
இதற்கிடையே பொள்ளாச்சியில் பேசிய திமுகவைச் சேர்ந்த நடிகர் சந்திரசேகர்,
திமகவில் இருந்து கொண்டு, பேசக் கற்றுக் கொண்டு இப்போது திமுகவையே தாக்கிப்பேசி வரும் ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன் போன்றவர்களை வாக்காளர்கள் மதிக்கமாட்டார்கள் என்றார்.
பொள்ளாச்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சாந்தி தேவியை ஆதரித்துசந்திரசேகர் பிரசாரம் செய்தார். அப்போது அவர் நடிகர்கள் ராதாரவி,எஸ்.எஸ்.சந்திரன், செந்தில், முரளி, ஆனந்தராஜ் உள்ளிட்ட அதிமுக நடிகர்களைசரமாரியாகத் தாக்கிப் பேசினார்.
எங்களிடம் இருந்து கொண்டு பேசக் கற்றுக் கொண்டவர்கள்தான் ராதாரவியும்,எஸ்.எஸ்.சந்திரனும். ஆனால் இன்று திமுகவையே தாக்கிப் பேசி வருகிறார்கள்.இவர்களை மக்கள் மதிக்கப் போவதில்லை. கற்றுக் கொண்ட இடத்தை மறந்து விட்டுஎதிரணிக்குப் போய் கத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
அரசியல் நாகரீகமே சற்றும் இல்லாத செந்தில், கருணாநிதியைப் பார்த்து ஒண்டிக்குஒண்டி வரத் தயாரா என்கிறார். நேற்று அரசியலுக்கு வந்தவர்கள் செந்தில், முரளி,ஆனந்தராஜ். இவர்களது பேச்சுக்கள் அரசியல் அநாகரீகத்தின் உச்சமாக உள்ளது.இவர்கள் மேடையிலும் நடிக்கிறார்கள்.
2001ம் ஆண்டு தனக்கு ஓட்டுப் போடும்படி அழுது புலம்பி கெஞ்சினார் ஜெயலலிதா.தமிழக மக்கள் இரக்க குணம் படைத்தவர்கள். இதனால் இளகிப் போய் ஓட்டுப்போட்டனர்.
ஆனால் ஆட்சியைப் பிடித்ததும் தனக்கு வாக்களித்தவர்களை மறந்து விட்டார்ஜெயலலிதா. நான்கு ஆண்டுகாலம் கொடுங்கோல் ஆட்சி நடத்திய அவர் ஐந்தாவதுஆண்டில் எல்லாவற்றையும் திருப்பிக் கொடுத்தது போல நாடகமாடி ஓட்டுவேட்டையாட நினைக்கிறார்.
கூடுதலாக 4 சீட் கிடைக்கிறதே என்பதற்காகவும், 40 கோடிக்காகவும் அணி மாறிவிட்டார் வைகோ. அவரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மானம் கெட்டுப் போய்அவர்கள் கை குலுக்கிக் கொள்கிறார்கள் என்றார் சந்திரசேகர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications