கருணாநிதிக்கு சமூக அக்கறை இல்லை: திருமா
வேலூர்:
சமூக அக்கறையே இல்லாமல் கலர் டிவி தருவோம் என்று வாக்குறுதிகளை அள்ளிவீசி வருகிறார் கருணாநிதி என விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர்தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட திருமாவளவன்பேசுகையில்,பின் தங்கிய மக்கள் கல்வியில் மேன்மையான நிலைக்கு வர வேண்டும் என்பதற்காகஇலவச சைக்கிள்களை வழங்கி வருகிறார் ஜெயலலிதா.
ஆனால் டிவி பார்த்துக் கெட்டுப் போகட்டும் மக்கள் என்ற எண்ணத்தில் இலசவமாககலர் டிவி தருவோம் எனக் கூறுகிறார் கருணாநிதி. இவர்களில் யாருக்கு சமூகஅக்கறை உள்ளது என்பதை மக்களே யோசித்துப் பார்க்கட்டும்.
விடுதலைச் சிறுத்தைகளை ஒரு கட்சியாக, சக்தியாக அங்கீகரித்த ஒரே கட்சிஅதிமுகதான். அந்தக் கட்சி மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும்.
இந்த அரசு மீது குற்றச்சாட்டுக்களைச் சொல்ல முடியவில்லை கருணாநிதியால்.அதனால் ஏற்பட்ட குழப்பத்தில்தான் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசிவருகிறார் என்றார் திருமாவளவன்.
ஆங்கிலம் வளர்த்த கலைஞர்: கண்ணன்
இதற்கிடையே நாகப்பட்டனம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபாலை ஆதரித்துப்பேசிய காங்கிரஸ் பேச்சாளரும் முதல்வர் ஜெயலலிதா ஆதரவாளருமான நெல்லைகண்ணன்,
4 முறை முதல்வராக இருந்துள்ளார் கருணாநிதி. ஆனால் அவரது ஆட்சிக்காலத்தில்தமிழ் வளர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது.
தமிழ் வளர்ச்சிக்காக என்ன செய்தார் கலைஞர்? உண்மையைச் சொல்லப் போனால்ஆங்கிலப் பள்ளிகளைத்தான் அவர் அதிகம் வளர்த்தார்.அவரது ஆட்சிக்காலத்தில்ஆங்கிலப் பள்ளிகள்தான் அதிகம் வளர்ந்தன. புற்றீசல் போல இன்று தமிழகம்முழுவதும் பரவிக் கிடக்கும் ஆங்கிலப் பள்ளிகளின் பெருக்கத்திற்கு இவர்கள்தானேகாரணம்.
கருணாநிதி குடும்பத்திடம் இன்று கோடிக்கணக்கான கருப்புப் பணம் முடங்கிக்கிடக்கிறது. இவற்றை மீட்க மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் என்ன செய்தார்.நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் என்றார் கண்ணன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications