மதுரையில் கேப்டன் மீது கல் வீசிய குடிமகன்!

Subscribe to Oneindia Tamil

மதுரை:

நடிகர் விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது குடிபோதையில் இருந்தவாலிபர் அவர் மீது கல் எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையில் நடிகர் விஜயகாந்த் ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்டார்.சமயநல்லூர் தொகுதிக்குட்பட்ட புதூர் பகுதியில் கட்சி வேட்பாளர் தங்கம் பாஸ்கரனைஆதரித்து விஜயகாந்த் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென விஜயகாந்த் மீது ஒரு கல் வந்து விழுந்தது. இதனால் கூட்டத்தில்பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் ஒரு வாலிபர் குடிபோதையில் தள்ளாடியபடி நின்றுகொண்டிருந்தார். இதையடுத்து தொண்டர்கள் கோபமாகி அவர் மீது பாய முயலவேஅவர்களை விஜய்காந்த் தடுத்தார்.

பின்னர் மைக்கை கையால் பொத்திக் கொண்ட விஜயகாந்த், காவல் துறையினரைப்பார்த்து, இதை பெரிதுபடுத்த விரும்பவில்லை, அவரை மட்டும் இங்கிருந்துஅப்புறப்படுத்தி விடுங்கள் என்றார்.

Vijaykanth

முன்னதாக ஒரு தொண்டர் விஜய்காந்தை நோக்கி, திமுக, அதிமுக இரண்டையும்தாக்குகிறீர்கள். உங்கள் நிலைதான் என்ன என்று கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவருக்கு விஜயகாந்த் பதிலளிக்கையில், அதை உன்னிடம் சொல்ல வேண்டியஅவசியம் இல்லை என்று கூறி அந்த நபரை கூட்டத்திலிருந்து வெளியேற்றஉத்தரவிட்டார்.

அண்ணனுக்கு ஓட்டு: பிரேமலதா பிரசாரம்!

இதற்கிடையே விருத்தாச்சலம் தொகுதியில் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா, தனது கணவருக்காக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.கடந்த 13ம் தேதி விருத்தாச்சலத்திற்கு வந்து முகாமிட்டுள்ளார் பிரேமலதா. கிராமம் கிராமமாக சென்று அவர் பிரசாரம் செய்து வருகிறார்.பெரியவடிவாடி, சின்னவடிவாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்ற பிரேமலதா அங்கு விஜயகாந்த்துக்கு வாக்கு சேகரித்தார். பெண்கள் அவருக்குஉற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவரும் பெண்களிடம் படு சகஜமாக பேசி தனது கணவருக்காக

வாக்கு சேகரித்தார்.

இதுவரை அய்யாவுக்கும், அம்மாவுக்கும் ஓட்டுப் போட்டு விட்டீர்கள். இந்த முறை உங்களது அண்ணன் இத்தொகுதியில் நிற்கிறார். அவருக்கே ஓட்டுப்போடுங்க என்று கேட்கும் பிரேமலதாவின் பிரசாரம் கிராம மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பின்னர் பெரியவடிவாடி கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்ற அவர் அங்கிருந்த பழுப்பு நிற அரிசியை கையில் ஒரு பிடி எடுத்துக் கொண்டுபொதுமக்களிடம் திரும்பி, உங்கள் அண்ணனுக்கு ஓட்டுப் போட்டால் இதுபோன்ற தரமில்லாத அரிசியாக இல்லாமல், நல்ல தரமான, சரியானஅளவிலான அரிசி உங்கள் வீடு தேடி வரும் என்று பிரேமலதா கூறியபோது விசில் சத்தம், கைத்தட்டலும் வானைப் பிளந்தது.

வெயிலையும் பொருட்படுத்தாமல் அண்ணன் விஜயகாந்த்துக்காக பிரமேலதா தீவிர சுற்றுப்பயணம்செய்து பிரசாரம் செய்து வருவது விருத்தாச்சலம் தொகுதி மக்களின் கவனத்தைஈர்த்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+