மகா குழப்பத்தில் பாஜகவின் மெகா கூட்டணி!
சென்னை:
ஐக்கிய ஜனதா தளத்தின் தமிழ் மாநிலப் பிரிவின் தலைவர் பதவியில் இருந்தராஜசேகரன் அப்பதவியிலிருந்து விலகி விட்டதாலும், கூட்டணியிலிருந்து அக்கட்சிவிலகி விட்டதாலும் அக்கட்சிக்கு ஒதுக்கிய 10 தொகுதிகளை என்ன செய்வது என்றுதெரியாமல் பாஜக பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.
தமிழகத்தில் பாஜக அமைத்துள்ள கூட்டணியில் கிட்டத்தட்ட 14 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்திலேயே அதிக அளவிலான கட்சிகளைக் கொண்ட கூட்டணிஎன்ற பெருமை பாஜகவுக்கு இதன் மூலம் கிடைத்துள்ளது.லெட்டர் பேட் வைத்திருபவர்களுக்கெல்லாம் கூட்டணியில் இடம் தந்து சீட்டும் தந்துதனது பெருந்தன்மையைக் காட்டியுள்ளது பாஜக.
இப்போது அந்தக் கூட்டணியில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இக்கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம் இடம்பெற்றிருந்தது. கட்சியின் அகில இந்தியத்தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டசுக்குத் தெரியாமலேயே அந்தக் கட்சி இந்தக்கூட்டணியில் சேர்ந்தது.
இதுதொடர்பாக மாநிலத் தலைவர் ராஜசேகரனும், தமிழக பாஜக தலைவர்ராதாகிருஷ்ணனும் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டிருந்தனர்.
ஜனதா தளத்திற்கு 10 தொகுதிகளை பாஜக ஒதுக்கியது.
ஆனால் கூட்டணியில் இருந்து விலகுமாறு ராஜசேகரனுக்கு ஜார்ஜ் பெர்னாண்டஸ்கட்-அண்ட்-ரைட்டாக உத்தரவிட்டார்.
இந்த நிலையில் ஜார்ஜ் பெர்னாண்டஸை தலைவர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு புதியதலைவராக சரத் யாதவ் பொறுப்பேற்றார்.
அவர் முதலில் பாஜக கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால் இப்போதுகூட்டணி வேண்டாம் என்று கூறி விட்டாராம்.
இதனால் குழம்பிப் போன ராஜசேகரன், பாஜக கூட்டணியிலிருந்து தங்களது கட்சிவிலகிக் கொள்வதாக ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதினார். அதே வேகத்தில்சரத்யாதவுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், நான் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன் என ராஜசேகரன்தெரிவித்துள்ளார். இதனால் ஐக்கிய ஜனதாதளத்திற்குத் தமிழகத்தில் தலைவர் இல்லாதநிலை ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், அக்கட்சிக்கு ஒதுக்கிய 10 தொகுதிகளை என்ன செய்வது,எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பதா, இல்லை அப்படியே விட்டு விடுவதா என்றகுழப்பத்தில் பாஜக ஆழ்ந்துள்ளது.
மாநிலம் ஆண்டியாகப் போகிறது: பாஜக
இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிக பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன்,
திமுக 2 ரூபாய்க்கு அரிசி என்கிறது. அதற்குப் போட்டியாய் அதிமுக 10 கிலோ அரிசி இலவசம் என்கிறது. இதனால் மாநிலத்தின் பொருளாதாரம்சீர்குலைந்து தமிழகமே ஆண்டிப்பட்டி ஆகப் போகிறது என்றார்.
இதற்கிடையே கோவை வந்த பாஜக பொதுச் செயலாளர் சுஷ்மா சுவராஜ், திராவிடக் கட்சிகளின் ஆதரவில்லாமல்பாஜக முதன்முறையாக தனித்துப் போட்டியிடுகிறது. இதனால் தமிழகத்தில் பாஜக காலூன்றப் போகிறது.
திமுகவும் அதிமுகவும் ஆட்சியில் இருந்தபோது அரிசியை ஏன் குறைந்த விலைக்குத் தரவில்லை என்றுதெரியவில்லை.
இப்போதைய ரத யாத்திரை மூலம் அத்வானியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications