அமெரிக்க நாராயணனுக்கு தீரர் மகள் ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி மைலாப்பூர் தொகுதியில் சுயேச்சையாகப்போட்டியிடும் அமெரிக்க நாராயணனுக்கு ஆதரவாக தீரர் சத்தியமூர்த்தியின் மகள்பிரசாரம் செய்யவுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் டம்மிப் பொறுப்பில் ரொம்ப காலமாக இருந்து வந்த அமெரிக்கநாராயணன், திடீரென சமீபத்தில் கட்சியிலிருந்து விலகினார். காந்தி படத்தின் முன்தனது ராஜினாமா கடிதத்தை வைத்து கண்ணீர் மல்க அதை எடுத்துப் போய் கட்சிநிர்வாகிகளிடம் கொடுத்து விட்டுச் சென்றது நினைவிருக்கலாம்.அந்த அமெரிக்க நாராயணன் மைலாப்பூர் தொகுதியில் சுயேச்சையாகப்போட்டியிடுகிறார்.
இவரை தொகுதி மக்களுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டத்தை அவரது ஆதரவாளர்கள்மைலாப்பூர் நாராயணசாமி தோட்டத்தில் நடத்தினர்.
இதில் தீரர் சத்தியமூர்த்தியின் (இவர் பெயரில்தான் காங்கிரஸ் தலைமையகம் உள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது) மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தியும் கலந்து கொண்டார்.
நாராயணனுக்கு ஆதரவாக தான் பிரசாரம் செய்யப் போவதாக லட்சுமிசெய்தியாளர்களிடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications