11ல் போட்டி; 223ல் திமுகவுக்கு ஆதரவு-டிஆர்
மயிலாடுதுறை:
11 தொகுதிகளில் போட்டியிடுவதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் மீதமுள்ள223 தொகுதிகளில் திமுகவுக்கு ஆதரவாக செயல்படப் போவதாக இயக்குனர் விஜயடி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் கேவலப்பட்டுப் போன ராஜேந்தர் தனித்துப் போட்டியிடுவேன்என்று அறிவிததார். சமீபத்தில் 11 தொகுதிகளில் தனது லட்சிய திமுக போட்டியிடும்என்று அறிவித்த ராஜேந்தர் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டார். அவர்மயிலாடுதுறையில் போட்டியிடுகிறார்.அவரை போட்டியிலிருந்து விலகக் கோரியுள்ள கருணாநிதி, திமுக கூட்டணியின்வெற்றிக்கு உதவுமாறு கூறியுள்ளார்.
இந் நிலையில் ராஜேந்தர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன்மனைவி உஷாவும் வந்திருந்தார். வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர்செய்தியாளர்களிடம் ராஜேந்தர் பேசுகையில்,
ஒரு முடிவு எடுத்ததற்குப் பிறகு கால அவகாசமே இல்லாத நிலையில் கருணாநிதிகோரிக்கை விடுத்துள்ளார். அவர் எனக்கு அரசியலில் குரு.
அந்த குரு ஒரு இக்கட்டான நிலையில் இருக்கும்போது, நீ ஒரு பக்கம் இருக்கவேண்டும் என்று சொல்லும்போது இந்த 11 தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில்ஆதரவு தர நான் சம்மதிக்கிறேன்.
இந்த 11 தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணிக்கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய கிடைத்த வாய்ப்பு எனக்கும், எனதுகட்சிக்கும் கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன்.
என்னுடைய சுய மரியாதைக்கும், தன்மானத்திற்கும் கிடைத்த வெற்றியாககருதுகிறேன் என்றார் ராஜேந்தர்.












Click it and Unblock the Notifications