வைஷ்ணவியின் காதலர் கைது
டிவி நடிகை வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவரது காதலர் தேவ் ஆனந்த் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விசில், பாபா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வைஷ்ணவி, கொண்டாட்டம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை சன்டிவியில் தொகுத்து வழங்கினார்.
![]() |
| வைஷ்ணவியுடன் தேவ் ஆனந்த் |
| (படம்: நன்றி தமிழ்முரசு) |
வைஷ்ணவியின் தற்கொலை குறித்து அண்ணா நகர் போலீசார் அவரது தந்தை தணிகைவேலன், தாயார் ரஞ்சனா,சகோதரி சுகாசினி ஆகியோரிடமும் உறவினர்கள், உடன் நடித்தவர்களிடமும், தோழிகளிடமும் விசாரணைநடத்தினர்.
தனது மகளின் சாவுக்கு தேவ் ஆனந்தே காரணம் என்று வைஷ்ணவின் தாயார் ரஞ்சனா புகார் கூறியதால்,அவரிடமும் தீவிர விசாரணை நடந்தது.
மனைவி தொடரில் நடித்தபோது அவரது கணவராக நடித்த தேவ் ஆனந்துக்கு வைஷ்ணவிக்கு நெருக்கம்ஏற்பட்டுள்ளது. இத்தனைக்கும் தேவ் ஆனந்த்துக்கு திருமணமாகி ஒரு மகனும் மகளும் உள்ளனர். முதலில்தனக்கு திருமணமான விவரத்தை மறுத்துவிட்டு வைஷ்ணவியைக் காதலித்துள்ளார் தேவ் ஆனந்த்.
![]() |
| வைஷ்ணவியின் உடலருகே குடும்பத்தார், டிவி நடிகைகள் |
சமீபத்தில் ஒரு கலை நிகழ்ச்சிக்குச் சென்றபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சில நாட்கள்சந்திக்காமல் இருந்துவிட்டு பின்னர் சமாதானமாகி ஈஸ்ட் கோர்ஸ்ட் ரோட்டில் ஒரு விடுதியில் இருவரும்சந்தித்துள்ளனர். கூடவே சில தோழிகளையும் வைஷ்ணவி அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது தன்னை திருமணம் செய்யுமாறு வைஷ்ணவி நெருக்கியதாகவும் தேவ் ஆனந்த் சில காலம்பொறுத்திருக்குமாறு கூறியதாகவும் தெரிகிறது. இதையடுத்து உன்னை விட்டுப் போய் விடுகிறேன் என்றுசொன்ன வைஷ்ணவியை தேவ் ஆனந்த் அறைந்துள்ளார்.
பாட்டிலை உடைத்தும் குத்த முயன்றுள்ளார். அதில் வைஷ்ணவிக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்துகடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற வைஷ்ணவியை தோழிகள் காப்பாற்றி அழைத்து வந்துள்ளனர்.வரும்போது பஸ் முன் பாய்ந்து சாகவும் முயன்றுள்ளார் வைஷ்ணவி. தோழிகள் தான் காப்பாற்றியுள்ளனர்.
இந் நிலையில் தான் வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதற்கு முன் சுமார் 15 நிமிடம் தேவ்ஆனந்துடன் வைஷ்ணவி செல்போனில் பேசியுள்ளார். அப்போது திருமணம் சம்பந்தமாக இருவருக்கும் தகராறுஏற்பட்டு தான் வைஷ்ணவி தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
தேவ் ஆனந்திடம் போலீசார் விசாரித்தபோது, காதலை அவர் மறைக்கவில்லை. வைஷ்ணவியும் நானும்காதலித்தோம். என் மனைவி வீணாவின் ஒத்துழைப்போடு திருமணம் செய்யலாம் என்று இருந்தேன் என்றுகூறியுள்ளார் தேவ் ஆனந்த்.
தேவ் ஆனந்திடம் விசாரணை நடத்திய போலீசார் அவர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
இதையடுத்து இதையடுத்து எக்மோர் நீதிமன்றத்தில் தேவ் ஆனந்த் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்கநீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தேவ் ஆனந்த் ஓ நெஞ்சே என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications