பேச்சு சிக்கல்-இலங்கையில் நார்வே சிறப்பு தூதர்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஜெனீவாவில் நடக்கவுள்ள அமைதிப்பேச்சுவார்த்தைகள் சந்தேகத்திற்கிடமாகியுள்ள நிலையில் இலங்கை அரசு அதிகாரிகளையும் புலிகளையும்நார்வே அமைதித் தூதர் சந்திக்கிறார்.

கடந்த சில வாரங்களில் தமிழர் பகுதிகளில் நடந்த தாக்குதல்கள், வன்முறைகளில் பலர் உயிரிழந்தனர். அதேபோல கண்ணி வெடிகளில் சிக்கி ராணுவத்தினரும் பெரும் எண்ணிக்கையில் பலியாயினர்.

தமிழர் பகுதிகளில் நடந்த வன்முறை குறித்து கிழக்குப் பகுதியின் கமாண்டர்களுடன் புலிகளின் தலைவர்பிரபாகரன் நேரில் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளார். ஆனால், அவர்கள் கடல் வழியாக வன்னி பகுதிக்குவருவதில் பாதுகாப்பு சிக்கல்கள் எழுந்துள்ளன.

வழக்கமாக ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்கள் அழைத்து வரப்படுவர். ஆனால், இம்முறை அதைத் தரஇலங்கை அரசு மறுத்துவிட்டதால் கடல் வழியாகவே வந்தாக வேண்டும்.

ஆனால், கமாண்டர்களும் நார்வே குழுவினரும் நிராயுதபாணிகளாக வந்த கப்பலை இலங்கை கடற்படைக்கப்பல்கள் தொடர்ந்து வந்ததால் அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

தனது கமாண்டர்களுடன் பேச முடியாத வரை ஜெனீவா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் செல்ல முடியாதுஎன புலிகள் தரப்பு அறிவித்துவிட்டது. இதையடுத்து தனியாருக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்களை புலிகள்பயன்படுத்தலாம் என இலங்கை அரசு கூறியுள்ளது.

ஆனால், இலங்கையில் அதிக உயரத்தில் பறக்கும் தனியார் ஹெலிகாப்டர்கள் இல்லை. மேலும் அவற்றால்தாக்குதல்களை எதிர்கொள்ளவும் முடியாது என்று புலிகள் கூறியுள்ளனர்.

மேலும் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகளின்போது ஒப்புக் கொண்டபடி கருணா உள்ளிட்ட குழுக்களிடம் இருந்துஆயுதங்களைப் பறிமுதல் செய்யும் பணியை இலங்கை அரசு ஆரம்பிக்கவே இல்லை.

இதை சுட்டிக் காட்டியுள்ள புலிகள் இலங்கை தனது உறுதிமொழிகளை முதலில் நிறைவேற்ற வேண்டும் என்றுகூறியுள்ளார்.

இதனால் முதலில் தள்ளிப் போன பேச்சுவார்த்தைகள் இப்போது நடக்குமா என்பதே சந்தேகத்திற்குஇடமாகியுள்ளது.

இந் நிலையில் நார்வேயின் சிறப்புத் தூதர் ஜான் ஹென்ஸ்சென் பார் இலங்கை விரைந்துள்ளார்.பேச்சுவார்த்தைகளைத் தொடரச் செய்ய அவர் நடவடிக்கைகளில் இறங்கவுள்ளார்.

இன்று இலங்கை அரசு அதிகாரிகளை அவர் சந்தித்தவுள்ளார். நாளை புலிகள் தரப்பை அவர் சந்திக்கவுள்ளார்.

5 தமிழர்கள் படுகொலை: ராணுவம் அட்டூழியம்

இந் நிலையில் யாழ்பாணம் அருகே வதரவதை என்ற இடத்தில் 5 தமிழர்களை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.

ஆட்டோவில் வந்து கொண்டிருந்த அவர்களை ராணுவ முகாமுக்குள் இழுத்துச் சென்று பின்னர் அவர்களைசுட்டுக் கொன்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+