நடராஜ்: ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை
டெல்லி:
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜை மாற்ற உத்தரவிட்டும், மாற்றாக 3அதிகாரிகளின் பெயர்களைப் பரிந்துரைக்க கோரியும் அனுப்பப்பட்ட உத்தரவுக்குதமிழக அரசு எந்த பதிலும் அளிக்காமல் மெளனம் சாதிப்பதால் தேர்தல் ஆணையம்இன்று டெல்லியில் முக்கிய முடிவை எடுக்கவுள்ளது.
தேர்தல் நேரத்தில் முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டிப் பேசியதால் பெரும்சிக்கலில் மாட்டினார் நடராஜ். அவரை அதிரடியாக மாற்றி தேர்தல் ஆணையம்உத்தரவிட்டது.இதை எதிர்த்து தமிழகஅரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்தவழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆணையத்தின் முடிவை ஏற்க வேண்டிய அவசியம்தமிழக அரசுக்கு இல்லை. அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் ஆணையத்துடன்தமிழக அரசு பேச வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால், தமிழக அரசு ஆணையத்துடன் பேசவில்லை. இதையடுத்து உயர் நீதிமன்றத்தீர்ப்பை எதிர்த்து தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
மேலும் ஆணையர் நடராஜை மாற்றுமாறு தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்குமீண்டும் உத்தரவிட்டது. புதிய ஆணையரை நியமிக்க வசதியாக 3 அதிகாரிகள்கொண்ட பெயர்களை பரிந்துரைக்குமாறும் உத்தரவிட்டிருந்தது.
பெயர் பட்டியலை அனுப்ப 18ம் தேதி (நேற்று) தான் கடைசி நாள் ஆகும்.
ஆனால் ஆணையத்தின் உத்தரவு எதையும் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. 3அதிகாரிகளின் பெயர் அடங்கிய பட்டியலையும் தமிழக அரசு அனுப்பவில்லை.
இந் நிலையில் நடராஜ் மாற்றல் தொடர்பாகவும், தமிழக அரசின் போக்கு குறித்தும்விவாதித்து முடிவு எடுக்க தேர்தல் ஆணையர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்றுடெல்லியில் நடக்கிறது.
இக்கூட்டத்தில் நடராஜை மாற்றி விட்டு புதிய ஆணையரை நியமிக்க தேர்தல்ஆணையமே முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications