“கோர்ட் உங்க அரசியல் மேடை இல்லை”.. கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் நீதிபதிகள் காட்டம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தற்காலிகமாக மட்டுமே பணி நியமனம் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள், "நீதிமன்றம் என்பது அரசியல் மேடை அல்ல" என்ற கருத்தைத் தெரிவித்தனர்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 32 பேருக்கு இன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஜோசப் விஜய், அரசுப் பணி ஆணை வழங்க உள்ளார். இன்று கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் அரசுப் பணி வழங்க உள்ள நிலையில், இதற்கு எதிரான மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.

karur high court vijay

இன்று விசாரணையின் ஆரம்பத்திலேயே, கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு பொருளாதார உதவி தேவைதானே? கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

உச்சநீதிமன்றத்தில் கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும்போது அரசுப் பணி வழங்குவது சரியல்ல. இது சாட்சியங்களை கலைக்கும் வாய்ப்பாக அமையும். கரூர் சம்பவங்கள் போல எதிர்காலத்தில் நடைபெறும் நிகழ்வுகளிலும் இவ்வாறு நடந்தால் அரசுப்பணி கோர வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில் கும்பகோணம் மகாமக சம்பவம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, தருமபுரி பஸ் எரிப்பு ஆகிய நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல, கருணை அடிப்படை பணிக்கான விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், அதாவது கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்கென்று விதிகள் இருக்கின்றன, அதனைப் பின்பற்ற வேண்டும் அல்லது புதிய விதிகளை உருவாக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் 'அரசு வேலை வழங்குவதில் என்ன தவறு?' என்று கேள்வி எழுப்பியிருந்த நீதிபதிகள், மேலும் சில கேள்விகளையும் எழுப்பினர். '41 பேருடைய குடும்பத்திற்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாகச் சட்டசபையில் அறிவிப்பு ஏதேனும் வெளியிடப்பட்டதா?' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மனுதாரர், "சட்டப்பேரவையில் அறிவிப்பு இல்லை. அதுபோல இவர்களுக்கு அரசுப் பணி வழங்கினால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள், டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வுகளுக்கு முயற்சிக்கும் போட்டித் தேர்வர்களுக்கு ஏமாற்றமாக அமையும்" என்றும் கூறினார்.

மேலும், மனுதாரர் தரப்பில், உயிரிழந்த நபர்களினுடைய குடும்பத்தினருக்கு ஏற்கனவே இழப்பீடானது வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு சார்பிலும் வழங்கப்பட்டிருக்கிறது, கட்சி சார்பிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் தற்போது அரசு பணி வழங்கப்பட இருக்கிறது என வாதிடப்பட்டது.

இதையடுத்து அரசு தரப்புக்கும் மனுதாரருக்கும் இடையே நீதிமன்றத்தில் காரசாரமாக வாதம் நடைபெற்ற நிலையில் நீதிபதிகள், 'நீதிமன்றம் என்பது அரசியல் மேடை அல்ல' என கருத்தைத் தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிபதிகள் தங்களது இடைக்கால உத்தரவில், "முதல்வர் விஜய் தற்போது கரூர் பயணத்தில் இருப்பதால் நிகழ்ச்சியை ரத்து செய்ய முடியாது. எனவே, பாதிக்கப்பட்டோருக்கு அரசுப் பணி வழங்கலாம். ஆனால் அது தற்காலிகமாகவே வழங்க வேண்டும். அரசு பணி என்பது இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது" என்று கூறி டின்பிஎஸ்சி-யை எதிர் மனுதாரராக சேர்த்து வழக்கின் விசாரணையை ஜூலை 21 ஆம் தேதிக்கு ஒத்தவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+