பிரச்சாரத்தில் ரசிகர்கள்-ரஜினி கடும் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தனது உருவப் படத்தையோ, மன்றக் கொடியையோ எந்த ரசிகரும் எந்தக் கட்சிக்கு ஆதரவாகவும் பயன்படுத்தக்கூடாது. மீறினால் அவர்கள் மன்றத்தை விட்டு நீக்கப்படுவார்கள் என நடிகர் ரஜினி எச்சரித்துள்ளார்.

காரைக்குடியைச் சேர்ந்த சசிகலா உறவினர் ஒருவரை வைத்து சில மாவட்ட ரஜினி மன்றத்தினரை அதிமுகஉடைத்தது.

ரஜினி பெயரில் கட்சியை ஆரம்பித்த அவர்கள் அதிமுகவுக்குப் பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்தனர்.அதைத் தொடர்ந்து மேலும் பல ரஜினி மன்றங்கள் அதிமுகவுக்கு ஆதரவாகக் களமிறங்கும் எனஎதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதை ரஜினி தடுத்துவிட்டார். தனது ஆதரவு யாருக்கும் இல்லை என்பதை மன்றத் தலைவர்சத்யநாராயணா மூலம் ரஜினி அறிவித்துவிட்டார். மேலும் ரசிகர்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு ஓட்டுபோடலாம் என்றும் அறிக்கை விட்டார்.

Rajini

ஆனாலும் பல இடங்களில் ரஜினி மன்றத்தினர் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவாக (பாமக தவிர்த்து) மன்றக்கொடிகளுடனும் ரஜினி படத்துடனும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ரஜினி ஆதரவு யாருக்குஎன்பதில் குழப்பம் நிலவுகிறது.

இந் நிலையில், ரஜினி தனது ரசிகர்களுக்கு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சத்யநாராயணா மூலம் அனைத்து மாவட்ட தலைமை ரசிகர் மன்றங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில்,

ரஜினியின் உருவப் படத்தையோ, மன்றக் கொடியையோ எந்த ரசிகரும் எந்தக் கட்சிக்கு ஆதரவாகவும்பயன்படுத்தக் கூடாது. மீறினால் அவர்களை மன்றத்தை விட்டு நீக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+