டி.ராஜேந்தரின் தந்தை மரணம்

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை:

லட்சிய திமுக தலைவரும், திரைப்பட இயக்குனருமான விஜய டி.ராஜேந்தரின் தந்தைதேசிங்கு உடையார் மயிலாடுதுறையில் மரணமடைந்தார்.

80 வயதான தேசிங்கு மயிலாடுதுறையில் தனது வீட்டில் வசித்து வந்தார். உடல் நலம்பாதிக்கப்பட்டிருந்த தேசிங்கு உடையார் நேற்று மரணமடைந்தார். அவருக்குராஜேந்தர் தவிர, வாசு, பாண்டியன் ஆகிய மகன்களும், சியாமளா என்ற மகளும்உள்ளனர்.

மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து விட்டுஹோட்டலில் தங்கியிருந்த ராஜேந்தருக்கு தந்தை இறந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் உடனடியாக தந்தையின் வீட்டுக்கு விரைந்தார்.

தேசிங்கு உடையார் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டதலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராஜேந்தருடன் தொலைபேசியில் பேசியகருணாநிதி தனது இரங்கலைத் தெரிவித்தார்.

டி.ஆர். சொத்து ரூ. 6.25 கோடி:

முன்னதாக மயிலாடுதுறை தொகுதியில் போட்டிட மனு தாக்கல் செய்த ராஜேந்தர்தனக்கு ரூ. 6.25 கோடிக்கு சொத்து இருப்பதாக பிரமாணப் பத்திரம் தாக்கல்செய்துள்ளார்.

ராஜேந்தர், மனைவி உஷா, மகன் குளரசன் ஆகியோரது பெயர்களில் 6 கோடியே 14லட்சத்து 16,374 ரூபாய்க்கு சொத்து உள்ளது.

வங்கியில் 1லட்சத்து 53 ஆயிரத்து 878 ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

எல்.ஐ.சி.யில் வாங்கிய கடன் தொகை ரூ 8 லட்சத்து 10,336 என கணக்குகாட்டியுள்ளார் ராஜேந்தர்.

மயிலாடுதுறை உள்ளிட்ட 11 தொகுதிகளில் ராஜேந்தரின் கட்சி போட்டியிடுகிறது.போட்டியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு கருணாநிதி விடுத்த வேண்டுகோளைராஜேந்தர் நிராகரித்து விட்டார்.

11 தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாகஅவர் அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+