தூத்துக்குடி: பிரமாண்ட கூட்டம்-திமுக அப்பாடா
தூத்துக்குடி:
தேர்தல் வரும்போது வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும், தேர்தல் முடிந்த பிறகுஅவற்றை மறந்து விடுவதும் அதிமுகவின் வாடிக்கையாகும் என்று திமுக தலைவர்கருணாநிதி விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடியில் தனது தென் மாவட்ட தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய கருணாநிதிஅங்கு நடந்த மிகப் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேசினார்.சரத்குமார் கட்சியை விட்டு விலகிய நிலையில் இப் பகுதியில் அவருக்கு உள்ளசெல்வாக்கை மனதில் வைத்து கருணாநிதியின் பிரச்சாரத்துக்கு கூட்டம் வருமா என்றுதிமுகவினர் மத்தியில் சந்தேகம் நிலவியது.
திக் திக் என்று காத்திருந்த திமுகவினரின் வயிற்றில் ஜில்லென்று மோர் ஊற்றியதுமாதிரி கருணாநிதியின் பிரச்சாரக் கூட்டத்துக்கு பெரும் கூட்டம் கூடியது.
தமிழகத்தில் புதுக்கோட்டையில் தான் கருணாநிதிக்கு மிக அதிகமான கூட்டம்கூடியதாக உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கு அடுத்ததாக பெரும் கூட்டம்தூத்துக்குடியில் கூடிவிட்டது.
அக் கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில், 2001ம் ஆண்டு நடந்த சட்டசபைத்தேர்தலின்போது அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஒரு வகுப்புக்கு ஒருஆசிரியர், இலவச எரிவாயு அடுப்பு என ஏகப்பட்ட வாக்குறுதிகளை கூறியிருந்ததுஅதிமுக.
ஆனால் அவற்றில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை.
இப்போதும் கூட 10கிலோ அரிசி இனாம், இனாம் என்று கூவி வருகிறார்கள்.
தேர்தல் முடியும் வரைதான் அப்படிச் சொல்வார்கள், முடிந்த பின்னர் அதைச் சொல்லமாட்டார்கள். ஏன் சொல்ல மாட்டார்கள் தெரியுமா? தேர்தல் முடிந்த பிறகு அவர்கள்ஆட்சியில் இருக்க மாட்டார்கள், எனவே சொல்ல மாட்டார்கள்.
தேர்தலில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்பதற்காக போலியானவாக்குறுதிகளை கூறி வரும் ஜெயலலிதாவை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றார்கருணாநிதி.
அம்மாவிடமிருந்து அய்யாவுக்கு...
இதற்கிடையே லாட்டரித் தடையை நீக்குங்கள் அம்மா, அம்மா என்று பத்திரிக்கைவிளம்பரங்கள் மூலம் கெஞ்சி வந்த தமிழ்நாடு லாட்டரிச் சீட்டு விற்பனையாளர்கள்சங்கம் தற்போது திமுக கூட்டணிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
அகில இந்திய லாட்டரி விற்பனையாளர்கள் சங்க கூட்டம் சென்னையில் நடந்தது.இக்கூட்டத்திற்குப் பின்னர் சங்கத் தலைவர் உஸ்மான் ஃபயஸ் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு தமிழக அரசுதடை விதித்தது. இதனால் 5 லட்சம் குடும்பங்கள் தத்தளித்து வருகின்றன. இவர்களில்பெரும்பாலானவர்கள் கண் பார்வையற்ற, காதுகேளாதவர்கள்.
லாட்டரிச் சீட்டுக்கான தடையை நீக்க பலமுறை கோரிக்கை விடுத்துப் பார்த்தோம்.ஆனால் அரசு பாராமுகமாக இருந்து விட்டது. திமுக ஆட்சிக்கு வந்தால் எங்களதுகோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளனர்.
அந்த நம்பிக்கையில் வரும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்குஆதரவாக நாங்கள் செயல்படப் போகிறோம். தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிவேட்பாளர்களை ஆதரித்து பிரசாரமும் செய்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications