4,218 வேட்பு மனுக்கள் தாக்கல்-இன்று பரிசீலனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட 4,218 பேர் வேட்பு மனு தாக்கல்செய்துள்ளனர். இந்த மனுக்கள் அனைத்தும் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 13ம் தேதிதொடங்கியது. நேற்று மாலை 3 மணியுடன் மனுதாக்கல் முடிவடைந்தது. கடைசிநாளான நேற்று மட்டும் 2,054 பேர் மனு தாக்கல் செய்தனர்.

இவர்களையும் சேர்த்து மொத்தம் 4,218 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.இவர்களில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், மாற்று வேட்பாளர்கள், சுயேச்சைவேட்பாளர்கள் அடங்குவர்.

இந்த மனுக்கள் அனைத்தும் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.முறையாக இல்லாத மனுக்கள், போதிய ஆவணங்கள் இல்லாத மனுக்கள், சொத்துக்கணக்கு தாக்கல் செய்யப்படாதவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.

2 தொகுதிகளுக்கு மேல் மனு தாக்கல் செய்துள்ளவர்களின் மனுக்களும் பரிசீலனையேசெய்யப்படாமல் நிராகரிக்கப்படும்.

24ம் தேதி மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ள கடைசி நாளாகும். அன்று மாலை 3மணி வரை மனுக்களை வாபஸ் பெற அவகாசம் அளிக்கப்படும். இதைத் தொடர்ந்துஇறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

அன்றே சுயேச்சைகளுக்கான சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு விடும்.

சிறப்பு தேர்தல் பார்வையாளர்:

இதற்கிடையே தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மத்திய தேர்தல் பார்வையாளர் (ஐஏஎஸ்) மற்றும் 50 தேர்தல் செலவீனப் பார்வையாளர்கள்நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கு சிறப்புத் தேர்தல் பார்வையாராக விக்ரம் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+