வீட்டில் ஒருவருக்கு நிச்சயம் வேலை: ஜெயலலிதா
பொள்ளாச்சி:
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாத குடும்பங்களில் ஒருவருக்குவேலை வாய்ப்பு அளிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
பொள்ளாச்சியில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா,தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், சட்டமன்றத்தில் எதிர்க் கட்சியினரின் அடாவடித்தனம்ஆகியவற்றையெல்லாம் சமாளித்து பல சாதனைகளை எனது அரசு படைத்தது என்றார்.
பின்னர் பழனி பகுதியில் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா,
2001ம் ஆண்டில் ஒரு பொற்கால ஆட்சி அமைக்க ாதரவு கேட்டேன். அள்ளித் தரும் வள்ளல்களாக பேராதரவைவழங்கினீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை திட்டங்கள் ஆக்கினேன்.
உங்கள் அன்புச் சகோதரியின் அரசு உங்கள் நம்பிக்கையை வீணடிக்கவில்லை. நான் செய்திருக்கின்ற சாதனைகள்எல்லாம் ஒரு நிமிடத்தில் உங்களிடம் விளக்குவது சாத்தியமல்ல. அதற்கு நேரமே போதாது.
மீண்டும் உங்கள் அதிமுக ஆட்சி அமையுமானால் சரித்திர சாதனை உருவாக்குவோம்.
தமிழகத்தின் இரண்டாம் நிலை நகர்களில் அதிக அளவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுஅடுத்த 5 ஆண்டுகளில் 30 லட்சம் இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை வாங்கித்தருவோம். மகளிருக்கும் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
நான் உங்களுடன் தான் கூட்டணி வைத்திருக்கிறேன். என் கூட்டணியின் விலாசமே நீங்கள் தான் என்றார்.












Click it and Unblock the Notifications