முத்துலட்சுமி விலக வேண்டும்: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதா மாறவே இல்லை. அவர் மாறிவிட்டதாக சில பத்திரிக்கைகள் தான் எழுதுகின்றன. அவர் மாறக்கூடிய சுபாவம் கொண்டவரே அல்ல என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:

அதிமுகவுக்கும் அதனுடன் கூட்டணி வைத்திருப்பவர்ளுக்கும் கடுமையான தேர்தல் ஜுரம் வந்துவிட்டது.சென்னையில் பிரச்சாரத்தைத் தொடங்கியபோது 5 லட்சம் பேருக்கு வேலை கொடுப்போம் என்று சொன்னஜெயலலிதா இப்போது தேனியில் போய் 32 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்கிறார்.

ரேசன் அரிசி விலை ரூ. 3.50லேயே தொடரும் என தேர்தல் அறிக்கையில் சொன்னவர் இப்போது 10 கிலோஅரிசி இலவசம் என்கிறார்.

வீரப்பன் மனைவி முத்துலட்சுமியை யாரோ தூண்டிவிட்டு பெண்ணாகரம் தொகுதியில் நிறுத்தியுள்ளார்கள்.மலைவாழ் மக்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்கி பாடுபடுமாறு அரிடம் கூறியிருந்தேன்.

ஆனால், யாரோ தூண்டிவிட்டு அவர் தேர்தலில் நிற்கிறார். அவர் வாபஸ் வாங்க வேண்டும் என்பதே என்விருப்பம். அவர் போட்டியில் தொடர்ந்தாலும் அதனால் எங்களுக்கு பாதிப்பில்லை என்றார்.முன்னதாக சென்னையில் பொதுக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ்,

ஜெயலலிதா மாறவே இல்லை. அவர் மாறிவிட்டதாக சில பத்திரிக்கைகள் தான் எழுதுகின்றன. அவர் மாறக்கூடிய சுபாவம் கொண்டவரே அல்ல. அவரை யாராலும் திருத்தவும் முடியாது.

மிடாஸ் சாராய ஆலையில் ரூ. 24,000 கோடிக்கு மது உற்பத்தி செய்து விற்றுவிட்டு ரூ. 5,000த்தை மட்டும்கணக்கில் காட்டியிருக்கிறார்கள். மிச்சம் உள்ள ரூ. 19,000 கோடி அவர்கள் வீட்டுக்குப் போய்விட்டது.

ராத்திரி 12 மணி வரை சாராயக் கடைகளை திறந்து வைத்து குடி,குடி,குடி என்று மக்களை குடிக்க வைத்து,தாலியை அறுத்து பணத்தை அள்ளுகிறார்கள் என்றார்.

முத்துலட்சுமிக்கு ஆதரவு: கருத்துக் கணிப்பு

பெண்ணாகரம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் சந்தனக் கடத்தல்வீரப்பனின் மனைவி முத்துலட்சுமிக்கு நல்ல ஆதரவு காணப்படுவதாக லயோலாகல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

இத்தொகுதியில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. ஆனால்உண்மையான போட்டி அதிமுக மற்றும் முத்துலட்சுமிக்கு இடையேதான் உள்ளது.

பாமக முழுமையான அளவில் (இப்போது மறைமுகமாக கொடுக்கிறது!) ஆதரவுகொடுத்தால் இத்தொகுதியில் முத்துலட்சுமி வெற்றிபெறுவது உறுதி என்றுகூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+