ஷில்பா ஷெட்டி-ரீமா சென்னுக்கு கைது வாரண்ட்
மதுரை:
மாலை நாளிதழில் ஆபாச புகைப்படம் வெளியானது தொடர்பாக தொடரப்பட்டவழக்கில் நடிகைகள் ஷில்பா ஷெட்டி, ரீமா சென் ஆகியோருக்கு மதுரை நீதிமன்றம்ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட்டை பிறப்பித்துள்ளது.
மாலை நாளிதழ் ஒன்றில் நடிகைகள் ஷில்பா ஷெட்டி, ரீமா சென் ஆகியோருடையபடங்கள் முழு ப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தன.
இவை மிகவும் ஆபாசமாக இருப்பதாகவும், பெண்மையை இழிவுபடுத்தும் வகையில்இருப்பதாகவும் கூறி தட்சிணாமூர்த்தி என்ற வழக்கறிஞர் அந்தப் பத்திரிக்கையின்மதுரை பதிப்பு ஆசிரியர் முருகன், ஷில்பா ஷெட்டி, ரீமா சென் ஆகியோர் மீது மதுரை2வது நீதித்துறை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பத்திரிக்கைஆசிரியர் முருகன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஆனால் நடிகைகள் இருவரும்ஆஜராகவில்லை.
இதையடுத்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கூறிஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி சீதாராமன்உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணை ஜூன் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications