2 வட மாநில கொள்ளையர்களுக்கு தூக்கு தண்டனை
வேலூர்:
வேலூர் மாவட்டம் வாலாஜாவைச் சேர்ந்த டாக்டர் மற்றும் தொழிலதிபரின் மனைவிஆகியோரைக் கொன்று கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜஸ்தான்மாநிலத்தைச் சேர்ந்த 2 கொள்ளையர்களுக்கு ராணிப்பேட்டை நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ. சுதர்சனம்கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் தொடர்பாகவிசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.இந்தப் படையின் விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பவேரியா என்றகும்பலைச் சேர்ந்த கொள்ளையர்கள் தான் கொலை மற்றும் கொள்ளைக்குக் காரணம்எனத் தெரிய வந்தது.
இந் நிலையில் தனிப்படை விசாரணைக்கு ஐ.ஜி ஜாங்கிட் தலைமை தாங்கினார்.அவரது தலைமைக்குப் பின்னர் ராஜஸ்தான் கொள்ளையர்களின் முழு விவரம் தெரியவந்தது.
ராஜஸ்தான், உ.பி., ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பதுங்கியிருந்த இந்தக்கும்பலைச் சேர்ந்த 13 பேரை போலீஸார் வளைத்துப் பிடித்தனர். இந்தவேட்டையின்போது 2 பேரை போலீஸார் உ.பி. மாநிலத்தில் வைத்து சுட்டுக்கொன்றனர்.
தமிழகம் கொண்டு வரப்பட்ட 13 கொள்ளையர்களிடம் விசாரணை நடத்தியபோதுபல திடுக்கிடும்த கவல்கள் கிடைத்தன.
கடந்த 1995ம் ஆண்டு வாலாஜாவில் டாக்டர் மோகன்குமார் கொல்லப்பட்டதிலும்,2003ம் ஆண்டு வாலாஜா அருகே உள்ள மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த குணசேர்என்ற தொழிலதிபரின் மனைவி சென்னம்மா கொல்லப்பட்ட சம்பவத்திலும்,
சேலம் காங்கிரஸ் தலைவர் தாளமுது நடராஜன் கொலை சம்பவம், திருவேற்காடுதிமுக பிரமுகர் கஜேந்திரன் கொலை வழக்கு உள்ளிட்ட மொத்தம் 26 கொலை மற்றும்கொள்ளை சம்பவங்களில் இந்தக் கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
வாலாஜாவில் நடந்த 2 கொலைகள் தொடர்பாக ராணிப்பேட்டை 2வது விரைவுநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தக் கொலை வழக்குகளில் அசோக்,ஓம்பிரகாஷ், ராகேஷ், ராஜேந்திர சிங் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.பாரதி, குணசேகர் கொலை வழக்கில் அசோக்,ஓம்பிரகாஷ் ஆகிய இருவருக்கும் தூக்குத் தண்டனை விதித்தார். ஆயுள் தண்டனையும்இவர்களுக்கு விதிக்கப்பட்டது.
மோகன்குமார் கொலை வழக்கில் ஓம்பிரகாஷ், பிரகாஷ், ஜெகதீஷ், ராகேஷ்,ராஜேந்திர சிங் ஆகியேராக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 7 ஆண்டுகடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
மிகப் பெரிய கொள்ளைக் கும்பலுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கிக் கொடுத்துதமிழக போலீஸ் சாதனை படைத்துள்ளது.
கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. சுதர்சனம் உள்ளிட்ட வழக்குகளிலும் இந்தக்கொள்ளையர்களுக்கு தொடர்பு இருப்பதால் அந்த வழக்குகளிலும் இவர்களுக்குஅதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications