அறியாமல் பேசுகிறார் கருணாநிதி: வைகோ
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்களா என்பதை அறிந்து கொள்ளாமல் தனித்துஆட்சி, கூட்டணி ஆட்சி என்று பேசி வருகிறார் கருணாநிதி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மேட்டூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கந்தசாமிக்கு ஆதரவாக வைகோ பிராசரம்செய்தார். அப்போது பேசுகையில்,தனித்து ஆட்சி அமைப்போம் என்று முன்பு கருணாநிதி கூறி வந்தார். இப்போதுகூட்டணி ஆட்சி ஏற்பட்டால் எதிர்க்க மாட்டோம் என்கிறார்.
முதலில் மக்கள் நமக்கு வாக்களிப்பார்களா என்பதை அவர் அறிந்து கொள்ளவேண்டும். கூட்டணி ஆட்சி அமைக்கக் கூட மக்கள் இவர்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள்.
பாலையும், தண்ணீரையும் பிரித்து எடுக்கும் அன்னப் பறவையைப் போல தமிழகமக்கள் நன்மை எது, தீமை எது என்பதை ஆராய்ந்து பார்த்த வாக்களிப்பார்கள்.
இன்று பலர் இருக்க வீடு கூட இல்லாமல் பிளாட்பாரங்களில் வசித்து வருகிறார்கள்.இவர்களிடம் கலர் டிவியைக் கொடுத்தால் அதை வைத்துக் கொண்டு அவர்களால்என்ன செய்ய முடியும்? என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications