வீட்டுக்கு ஒரு சீமைப் பசு: கேப்டன் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஏழை மக்கள் பிழைப்பதற்காக வீட்டுக்கு ஒரு சீமைப் பசு மாடு வழங்க நாங்கள்ஆட்சிக்கு வந்தால் ஏற்பாடு செய்வேன் என்று நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை ஆலந்தூர், தியாகராய நகர், வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளில்போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் விஜயகாந்த் இன்றுபிரசாரம் மேற்கொண்டார்.

தசரதபுரத்தில் இன்று காலை தனது பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது அவர்பேசுகையில், எனது வீட்டுக்கு பக்கத்தில் இருந்து நான் பிரசாரத்தைத்தொடங்கியுள்ளேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 15 கிலோ அரிசி இலவசமாகதருவோம் என்று நான் எனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தேன். அதன் பிறகேஅதிமுக இலவச அரிசி தருவதாக வாக்குறுதி அளித்தது.

ஒவ்வொரு வீட்டிலும் அரிசி மட்டும் இருந்தால் போதாது. மளிகை சாமான்களும்அவசியம். எனவே குடும்பத் தலைவிகள் மளிகை சாமான்கள் வாங்குவதற்குஅவர்களது பெயரில் மாதந்தோறும் 500 ரூபாய் அஞ்சலகக் கணக்கில் போடப்படும்.

3 வருடங்கள் வரை 2 குழந்தைகள் பிரசவத்திற்கு தாய்மார்களின் ஊட்டச்சத்துக்குமாதம் ரூ. 500 வழங்கப்படும்.

கிராமங்களில் ஏழைக் குடும்பங்கள் பிழைப்புக்கு வழியில்லாமல் இருக்கின்றன.அதுபோன்ற குடும்பங்களுக்கு தலா ஒரு சீமைப் பசு மாடு வழங்கப்படும். மக்கள்கஷ்டங்களை நான் அறிந்துள்ளேன்.

அவர்களுக்கு நிச்சயம் உதவுவேன் என்றார் விஜயகாந்த்.

ஆளாளுக்கு இலவசங்களையும், கிளாமர் வாக்குறுதிகளையும் அள்ளி விடுவதைப்பார்த்தால், வீட்டுக்கு ஒரு வாட்ச்மேன், வீட்டுக்கு ஒரு அல்சேஷன் நாய் என்ற ரீதியில்இனி வாக்குறுதிகள் வரும் போலத் தெரிகிறது.

மனுதாக்கல் செய்ய மறந்த தலைவர்:

இதற்கிடையே வேட்பு மனுத் தாக்கல் செய்யாமல் அலட்சியமாக இருந்த நெல்லைமாவட்ட தே.மு.தி.க. தலைவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதில்சுயேச்சையாக மனுத் தாக்கல் செய்திருந்தவர் கட்சியின் வேட்பாளராகஅறிவிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச் செயலாளர் ராமு வசந்தன்வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் தொகுதியில் கட்சியின் வேட்பாளராக மாவட்டதலைவர் கணபதி ராமசுப்பிரமணியம் அறிவிக்கப்பட்டிருந்தார். வேட்பு மனு தாக்கல்செய்ய வேண்டிய கடைசி நாள் வரை அவர் மனுத் தாக்கல் செய்யாமல், கட்சி விரோதநடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

இதையடுத்து அத்தொகுதியில் சுயேச்சையாக மனு தாக்கல் செய்திருந்த வி.எஸ்.திருப்பதி, கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தலைவர் விஜயகாந்த்தால்அறிவிக்கப்பட்டுள்ளார்.

கட்சிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் கணபதிராமசுப்பிரமணியம் மாவட்டத் தலைவர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாகநீக்கப்படுகிறார் என்று கூறியுள்ளார் ராமு.

அதிமுக, திமுகவுக்கு பயம் வந்தாச்சு:

முன்னதாக தி.நகர் பகுதியில் விஜய்காந்த் பேசுகையில், திமுக இதுவரை 2 தேர்தல்அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதிமுக 3 தேர்தல் அறிக்கைகளைவெளியிட்டுள்ளது. தே.மு.தி.க.வின் அசுர வளர்ச்சியைப் பார்த்து இரு கட்சியினரும்மிரண்டு போயிருக்கின்றனர்.

இரு கட்சிகளும் ஒரு நாளைக்கு ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்கள்.

திமுக கிலோ அரிசி 2 ரூபாய் என்றால் 10 கிலோ அரிசியை இலவசமாககொடுப்போம் என்று அதிமுக கூறுகிறது. திமுகவோ, இலவச டிவி, கேஸ் அடுப்பு எனஅடுக்கிக் கொண்டே போகிறார்கள்.

மக்களே தெளிவாக இருங்கள், இவர்கள் சொல்வதைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்.சிந்தித்துப் பாருங்கள். இவர்கள் சொல்லும் எதையுமே நிறைவேற்ற முடியாது.

புதிய சக்தியாக தே.மு.தி.க. உருவாகி விடுமோ என்று இரு கட்சிகளும் அஞ்சுகின்றன.எங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள், நடுங்குகிறார்கள். எங்களுடையது புதியரத்தம், புதிய சிந்தனை, புதிய கொள்கை. இதற்கு மக்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும்.

எனது கட்சியின் தேர்தல் அறிக்கையை நானே தயாரித்தேன், ஐ.ஏ.எஸ். அதிகாரியைவைத்து தயாரிக்கவில்லை. அலங்கார வார்த்தைகள் அதில் இல்லை. எதைச் செய்யமுடியுமோ அதைத்தான் அறிக்கையில் கூறியுள்ளேன்.

இதுவரை 30,000 கிலோமீட்டர் தொலைவுக்கு பயணம் செய்து மக்களைசந்தித்துள்ளேன். கிராமம் கிராமாக சுற்றி வந்துள்ளேன். இதுவரை எந்த அரசியல்தலைவரும் போகாத பகுதிக்கெல்லாம் போய் வந்துள்ளேன்.

எங்குமே நல்ல சாலை இல்லை, குடிநீர் வசதி இல்லை, மின்சார வசதி இல்லை.இதைப் பார்த்துத்தான் நான் தேர்தல் அறிக்கையைத் தயாரித்தேன். மக்களோடு,மக்களாக இருந்து அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு தேர்தல் அறிக்கையைதயாரித்துள்ளேன்.

திமுக தலைவர் கருணாநிதி ரூ. 100 கோடிக்கு ஒரு நடிகரிடம் பேரம் நடப்பதாககூறியுள்ளார். அவர் என்னைத்தான் கூறுகிறார். (அட இது புதுக் கதையா இருக்கே).நான் யாரையும் நம்பி இல்லை, மக்களை நம்பித்தான் உள்ளேன். எனக்கு ஒருசந்தர்ப்பம் கொடுத்துப் பாருங்கள்.

விருத்தாச்சலம் தொகுதியில் எனது பெயர் கொண்ட 3 பேரை நிறுத்தியிருக்கிறார்கள்.இது அவர்களுடைய பயத்தையே காட்டுகிறது. இதைக் கண்டு நான் அஞ்சப்போவதில்லை. இதுவரை நான் எனது தொகுதியில் ஒருமுறை கூட சுற்றுப்பயணம்செய்யவில்லை.

இந்தத் தைரியம் எந்தத் தலைவருக்காவது உண்டா? என்றார் விஜயகாந்த்.

விஜயகாந்த் மிரட்டல்: நடிகை புகார்

இதற்கிடையே விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுவதிலிருந்து விலகுமாறுதனக்கு விஜயகாந்த் தரப்பிலிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளதாக சுயேச்சையாகப்போட்டியிடும் துணை நடிகை தேவி போலீஸில் புகார் செய்துள்ார்.

இதைத் தொடர்ந்து அவருக்கு பெண் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தென் இந்திய நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் விஜயகாந்த்தை எதிர்த்துப்போட்டியிட்டவர் இந்த துணை நடிகை தேவி ஜெரீனா.

இவர் தற்போது விருத்தாச்சலம் தொகுதியிலும் விஜயகாந்த்தை எதிர்த்துசுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

இந் நிலையில் விஜயகாந்த் தரப்பிலிருந்து தனக்கு கொலை மிரட்டல் வருவதாக தேவிபோலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

மிரட்டல் புகார் குறித்து தேவி கூறுகையில், நான் மதுரை தல்லாகுளம் பகுதியைச்சேர்ந்தவள். சென்னையில் எனது கணவர் ஜான் பாஷாவுடன் வசித்து வருகிறேன்.

விஜயகாந்த்துக்கு அத்தையாக, நானே ராஜா நானே மந்திரி படத்தில் நடித்துள்ளேன்.இதுதவிர 50க்கும் மேற்பட்ட படங்களிலும், நிறைய டிவி தொடர்களிலும்நடித்துள்ளேன்.

நடிகர் சங்கத் தலைவர் தேர்தலின்போது விஜயகாந்த் ஆதரவாளர்களால் நான்தாக்கப்பட்டேன். பதவியேற்பு விழாவின்போதும் என்னைத் தாக்குவதற்காக 50பெண்களைத் தயார் செய்து வைத்திருந்தார் விஜயகாந்த்.

விஜயகாந்த்தால் திரைத் துறையினருக்கே ஒன்றும் செய்ய முடியவில்லை. மக்களுக்குஅவர் என்ன செய்து விட முடியும்? வாரிசு அரசியலை எதிர்க்கும் விஜயகாந்த், தனதுமாற்று வேட்பாளராக மனைவியை வேட்பு மனு தாக்கல் செய்ய வைக்கிறார்.

குடியாத்தம் தொகுதியில் மச்சினனை நிறுத்துகிறார். இவரா சுத்தமான அரசியல்வாதி,இவரது சுயரூபத்தை வெளிப்படுத்தவே நான் விருத்தாச்சலம் தொகுதியில்போட்டியிடுகிறேன் என்றார் தேவி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+