காவிரி: உச்சநீதிமன்றத்தை அணுகும் தமிழகம்
சென்னை:
காவிரி நடுவர் மன்றத்தின் புதிய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,21.04.06 அன்று நடைபெற்ற காவிரி நடுவர் மன்றத்தின் அமர்வில், சில ஆணைகள்பிறப்பிக்கப்பட இருப்பதாக வழக்குப் பட்டியலில் குறிப்பிடப்பட்டது. இந்தஆணைகள், பயிர்களின் தண்ணீத் தேவை பற்றிய மதிப்பீடு விவரங்களை ஆய்வுசெய்வதற்காக குழு ஒன்றை அமைப்பது பற்றியதாகும்.
இது காவிரி நடுவர் மன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் மேலும்தாமதப்படுத்தும் என்பதால் தமிழக அரசின் கருத்தை முதலில் கேட்காமல், அத்தகையஆணைகள் எதுவும் பிறப்பிக்கப்படக் கூடாது என்று கூறி தமிழக வழக்கறிஞர், கூடுதல்அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதேபோல மற்ற மாநில வழக்கறிஞர்களும் கூட்டாக மனு ஒன்றைத் தாக்கல்செய்தனர்.
இவ்வாறு மறுப்பு தெரிவிக்கப்பட்ட பின்னரும், நடுவர் மன்றத்தின் உறுப்பினர்கள்என்.எஸ்.ராவ், சுதிர் நாராயணன் ஆகியோர் தாம் தற்காலிக ஆணைகள்பிறப்பிப்பதாகவும், அதன் மீது சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஒரு வார காலத்திற்குள்எழுத்து மூலமான கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்றும் அவை குறித்து 05.05.06அன்று முழுமையாக விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்கள்.
ஏற்கனவ சம்பந்தப்பட்ட மாநிலங்களிலும் நீர்த் தேவை குறித்து போதிய தகவல்களைநடுவர் மன்றம் கேட்டு விட்டதால் இந்தப் புதிய ஆய்வு குழு தேவையில்லை என்றுநடுவர் மன்றத் தலைவர் என்.பி.சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் 3 மாதங்களுக்குள் ஆய்வு நடத்தி அறிக்கை கொடுக்க முடியாது என்பதையும்அவர் தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால் அதையும் மீறி மற்ற இரு உறுப்பினர்களும்இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
இந்த வழக்கை பரிசீலிக்க ஏற்கனவே 16 ஆண்டுகளை நடுவர் மன்றம் எடுத்துக்கொண்டுள்ளது. இந் நிலையில் புதிய நிபுணர் குழு அமைத்தால் அது இறுதி தீர்ப்புவெளியாக மேலும் பல ஆண்டுகள் தாமதப்படுத்தும்.
எனவே இந்த நிபுணர் குழுவை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில்முறையிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இறுதித் தீர்ப்பினை தாமதமின்றிவெளியிடுவதை உறுதி செய்யும் வகையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications